Header Logo

செய்திகள்
அநுராதபுரம் செல்லும் மக்களுக்கு விசேட கோரிக்கை

Jun 28, 2026 - 10:05 PM -

0

அநுராதபுரம் செல்லும் மக்களுக்கு விசேட கோரிக்கை

இலங்கைக்கு உன்னதமான பௌத்த தர்மம் கிடைத்த பெருமைக்குரிய பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, மக்கள் தற்போதிருந்தே வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக வரிசையில் காத்திருக்கின்றனர். 

தேசிய பொசன் உற்சவத்தை வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை, அநுராதபுரம் அட்டமஸ்தானம் மற்றும் தந்திரிமலை ரஜமகா விகாரை ஆகியவற்றை மையமாகக் கொண்டு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இம்முறை பொசன் உற்சவம் நீண்ட வார இறுதி விடுமுறையில் அமைந்துள்ளதால், பெருமளவிலான பக்தர்கள் தற்போதிருந்தே அநுராதபுரம் புனித நகரத்தை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். 

அவ்வாறு வருகை தரும் பொதுமக்கள், புனித நகரிலுள்ள மரச்செடிகள் மற்றும் நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்குமாறும், குப்பைகளைக் கொட்டுவதைத் தவிர்க்குமாறும் அட்டமஸ்தானத்தின் பொறுப்பதிகாரி வணக்கத்திற்குரிய ஈதல்வெடுனுவெவே ஞானதிலக்க தேரர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

MOST READ

காணொளி
தேர்தலுக்கு அஞ்சினால் ஆட்சி நீடிக்காது - சுமந்திரன்

தேர்தலுக்கு அஞ்சினால் ஆட்சி நீடிக்காது - சுமந்திரன்

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!