Header Logo

சினிமா
அனிருத் - காவ்யா மாறன் திருமணம்!

Jun 29, 2026 - 11:48 AM -

0

அனிருத் - காவ்யா மாறன் திருமணம்!

இந்திய சினிமாவில் மோஸ்ட் வான்டெட் இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். இவர் இசையில் அடுத்ததாக ஜனநாயகன், தர்மன், லோகேஷ் - அல்லு அர்ஜுன் படம், ஜெயிலர் 2, DC உள்ளிட்ட பல படங்கள் உருவாகியுள்ளன. 

படத்திற்கு இசையமைப்பது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், கச்சேரிகளிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். ஒவ்வொரு நாடாக சென்று அனிருத் நடத்தும் கச்சேரிகள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெறுகின்றன. 

இசையமைப்பாளர் அனிருத் பிரபல தொழிலதிபர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனை காதலித்து வருவதாகவும், விரைவில் அவர்கள் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் தொடர்ந்து பலவிதமான செய்திகளை நாம் பார்த்தோம். ஆனால், அவை யாவும் வதந்திதான் உண்மை இல்லை என கூறப்பட்டது. 

இந்த நிலையில், ரஜினிகாந்தின் உறவினரும் பிரபல நடிகருமான YG மகேந்திரன், YouTube சேனல் ஒன்றில் அனிருத் - காவ்யா மாறன் திருமணம் விரைவில் நடக்கப்போகிறது என்று கூறியுள்ளார். இதன் மூலம் அனிருத் - காவ்யா மாறன் திருமணம் குறித்து வெளிவந்துள்ள செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து YG மகேந்திரன் தெரிவிக்கையில், 

"அனிருத் மிகவும் சாதுவான பையன். அவர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுடன் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். இதற்காக அவருக்கு வாழ்த்துகள் சொல்ல வேண்டும். நான் கேள்விப்பட்ட தகவலின் அடிப்படையில் தான் இதனை உறுதியாக சொல்கிறேன்" என தெரிவித்தார். 

விரைவில் அனிருத் மற்றும் காவ்யா மாறன் தரப்பிலிருந்து நல்ல செய்தி வெளிவரும் என ரசிகர்களால் தற்போது எதிர்பார்க்கப்படுகிறது.

MOST READ

காணொளி
இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

தமிழில் உரையாற்றிய அமைச்சர்!

தமிழில் உரையாற்றிய அமைச்சர்!

தேர்தலுக்கு அஞ்சினால் ஆட்சி நீடிக்காது - சுமந்திரன்

தேர்தலுக்கு அஞ்சினால் ஆட்சி நீடிக்காது - சுமந்திரன்

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!