Jun 29, 2026 - 03:41 PM
By அம்பாறை நிருபர் ஷிஹான்
By அம்பாறை நிருபர் ஷிஹான்
குளம் ஒன்றில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்த முதியவர் ஒருவரின் சடலம், நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழைய வளத்தாப்பிட்டி பகுதியில் இன்று (29) முற்பகல் வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் வளத்தாப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த அம்பாறை மாவட்ட உயிர்காப்பு மற்றும் அவசர மீட்புக் குழுவினர், பொதுமக்களுடன் இணைந்து முதியவரின் சடலத்தை மீட்டெடுத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

































