Header Logo
Mogo Academy

வடக்கு
நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

Jun 29, 2026 - 04:10 PM -

0

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!
Mobitel inner

கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நடனத்தால் உலக சாதனை படைத்துள்ளார். கவிஞர் வன்னியூர் ரஜீவனின் மகளான ரஜீவன் கம்சத்வனி என்ற 6 வயதுடைய சிறுமியே இந்த உலக சாதனையை நிலைநாட்டினார். 

குறித்த நிகழ்வு ​நேற்று (28) காலை 9.30 மணியளவில் கிளிநொச்சியில் உள்ள தனியார் விருந்தகம் ஒன்றில் நடைபெற்றது. 2 மணி 30 நிமிடம் தொடர்ச்சியாக பரத நாட்டியம் ஆடி குறித்த சிறுமி உலக சாதனையை நிகழ்த்தினார். 

குறித்த சாதனையானது, ராபா உலக சாதனை புத்தகத்தில் நேற்று பதிவு செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

நிகழ்வின் இறுதியில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கணேஸ்வரனால் "உலக நாட்டிய இளவரசி" என்று மகுடம் சூட்டி வைக்கபட்டது. 

இந்த நிகழ்வில் ராபா உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கை நாட்டுத் தூதுவர் கலாநிதி யோகதாசன் யூட் நிமலன், ராபா உலக சாதனை புத்தக நிறுவனத்தின் கிளிநொச்சி மாவட்ட தலைவர் கலாநிதி சிவனேஸ்வரன் விஜிதா ஆகியோர் நடுவர்களாக பங்குபற்றினர். 

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கணேஸ்வரன் கலந்து கொண்டிருந்தார்.

--

MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara