Header Logo
SLIC
பல்சுவை
இந்த மீனை சாப்பிட்டால் இவ்வளவு பலன்களா?

Jun 29, 2026 - 04:30 PM

இந்த மீனை சாப்பிட்டால் இவ்வளவு பலன்களா?
Mobitel Inner 1278
EDEX Inner

மிக குறைந்த விலையில் கிடைக்கும் இந்த ஒரு மீனைக் கொண்டு, முடி உதிர்வைக் குறைக்கலாம். இந்த ஒரு நன்மை மட்டுமல்ல, இந்த மீனிற்கு இன்னும் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. அவை என்னென்ன என்று, இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள். 

ஆரோக்கியமான வாழ்க்கைக்காக அசைவ உணவு உண்பவர்கள் பலரின் தீர்வும், மீனாக இருக்கும். அதற்கு காரணம் மீனில் உள்ள அதிக புரதச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள். இவை உடலுக்கு அதிக நன்மை கொடுப்பவை. இருப்பினும், விலை உயர்ந்த சால்மன் போன்ற மீன் வகைகளில்தான் அதிக ஊட்டச்சத்துக்கள் இருப்பதாக பலரும் நினைப்பதுண்டு. 

ஆனால் மலிவான விலையில் கிடைக்கும் மத்தி மற்றும் கானாங்கெளுத்தி மீன்கள், அதிக விலை கொண்ட மீன்களை விட உடலுக்கு அதிக ஆரோக்கிய நன்மைகளைத் தருகின்றன என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். வாரம் இரண்டு முறை இந்த சத்துக்கள் நிறைந்த மீன்களை உண்பது வியக்கத்தக்க நன்மைகளைத் தரும். 

பலரையும் வதைக்கும் முக்கியப் பிரச்சனையான முடி உதிர்வுக்கு, இந்த மீன்கள் நல்ல தீர்வாக இருக்கக்கூடும். ஏனெனில் இவ்வகை மீன்களில் நிறைந்துள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் பி12 ஆகிய ஊட்டச்சத்துக்கள் முடியின் வேர்க்கால்களுக்கு நிறைய ஊட்டச்சத்துக்களை அளிக்கின்றன. மேலும், இவை தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி முடி உதிர்வை அடியோடு தடுப்பதுடன், கூந்தல் அடர்த்தியாக வளரவும், நரைமுடி வராமல் பளபளப்பாக இருக்கவும் பெரிதும் உதவுகிறது. 

பொதுவாகவே வயது கூடும்போது தலைமுடி பலவீனமடைவதும், மூட்டு வலிகள் வருவதும் இயல்பானது. அப்படியான சூழலில் இந்த மீன்களில் அதிகளவில் நிறைந்துள்ள வைட்டமின் டி, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய ஊட்டச்சத்துக்கள், முடிகளின் அடர்த்தியை அதிகரித்து அவற்றை வலுவாக மாற்றுகின்றன. மேலும், இளம் வயதிலேயே ஏற்படும் ஆர்த்ரைடிஸ் (மூட்டுவாதம்) மற்றும் மூட்டு வலி அபாயத்தையும் இவை தடுக்கின்றன. 

மேலும் இந்த மீன், இதய நோய் ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்கவும் பயன்படுகின்றன. அந்தவகையில் இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்பின் (LDL) அளவை வேகமாக குறைக்கின்றன. அவை நல்ல கொழுப்பை அதிகரித்து, இரத்த நாளங்களில் இரத்தக் கட்டிகள் ஏற்படுவதைத் தடுக்கின்றன. இது உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுவதோடு, மாரடைப்பு ஏற்படும் அபாயத்தையும் பெருமளவில் குறைக்கிறது. 

இவை மட்டுமன்றி இந்த மீன்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள், சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நினைவாற்றலை அதிகரிக்கவும் மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் உதவுகின்றன. 

இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த மீன்கள் சந்தையில் மிகக் குறைந்த விலையில் அனைவருக்கும் கிடைக்கின்றன. எனவே குறைந்த செலவில், உடலுக்குத் தேவையான முழுமையான தசை வலிமையையும் புரதங்களையும் பெற நினைப்பவர்களுக்கு, இது பெஸ்ட் சாய்ஸ்.

MOST READ

காணொளி
மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

Mobitel 1278