Header Logo

செய்திகள்
உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் சரிந்த இலங்கை அணி!

Jun 29, 2026 - 07:36 PM -

0

 உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் சரிந்த இலங்கை அணி!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சந்தித்த பாரிய தோல்வியைத் தொடர்ந்து, ஐ.சி.சி. உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் (WTC) புள்ளிப் பட்டியலில் இலங்கை அணி இரண்டு இடங்கள் பின்னோக்கிச் சரிந்துள்ளது. 

இதன்படி, இலங்கை அணி நான்காவது இடத்தில் இருந்து ஆறாவது இடம் வரை சரிந்துள்ளதுடன், தனஞ்சய டி சில்வா தலைமையிலான இலங்கை அணி தற்போது 44.44 புள்ளிகள் சதவீதத்தைக் கொண்டுள்ளது. 

அன்டிகுவாவின் சேர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி இலங்கையை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 217 ஓட்டங்களால் தோற்கடித்தது. 

இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் பெற்ற 308 ஓட்டங்களுக்குப் பதிலளித்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 629 ஓட்டங்களைக் குவித்தது. 

தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 101 ஓட்டங்களுக்குள் சுருண்டதை அடுத்து, மேற்கிந்தியத் தீவுகள் அணி எளிதான வெற்றியைப் பதிவு செய்தது. 

இலங்கை அணியின் இந்த வீழ்ச்சியை அடுத்து, பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகள் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களுக்கு முன்னேறியுள்ளன. 

8 போட்டிகளில் 7 வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியுடன் அவுஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் நீடிப்பதுடன், தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன. 

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஜூலை 3ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

MOST READ

காணொளி
நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

தமிழில் உரையாற்றிய அமைச்சர்!

தமிழில் உரையாற்றிய அமைச்சர்!

தேர்தலுக்கு அஞ்சினால் ஆட்சி நீடிக்காது - சுமந்திரன்

தேர்தலுக்கு அஞ்சினால் ஆட்சி நீடிக்காது - சுமந்திரன்

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்