Header Logo
Mogo Academy

செய்திகள்
தெங்கு ஏற்றுமதி வருமானம் 21 சதவீதத்தால் அதிகரிப்பு

Jun 29, 2026 - 11:34 PM -

0

தெங்கு ஏற்றுமதி வருமானம் 21 சதவீதத்தால் அதிகரிப்பு
Mobitel inner

இந்த ஆண்டின் ஜனவரி முதல் மே வரையான காலப்பகுதியில் இலங்கையின் தெங்கு ஏற்றுமதி வருமானம் 514 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 21 சதவீத வளர்ச்சியாகும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். 

மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாக கப்பல் போக்குவரத்து பாதைகளில் ஏற்பட்டுள்ள தடைகள், கப்பல் கட்டணங்கள் மற்றும் காப்புறுதிச் செலவுகள் அதிகரிப்பு மற்றும் எரிபொருள் விலை உயர்வு போன்ற சவால்களுக்கு மத்தியிலும் இந்த வளர்ச்சியை எட்டியிருப்பது சிறப்பம்சமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தேங்காய் விளைச்சல் அதிகரித்தமை மற்றும் ஏற்றுமதிக்கான தேவைப்பாடு உயர்ந்தமை ஆகியன இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன என தெங்கு அபிவிருத்தி அதிகார சபை கூறுகிறது. 

இருப்பினும், நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாக செவ்விளநீர் ஏற்றுமதி சுமார் 33 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையின் செவ்விளநீர் ஏற்றுமதியில் சுமார் 95 சதவீதம் டுபாய் சந்தைக்கே மேற்கொள்ளப்படுவதனால் இந்த நிலைமை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஏனைய தேங்காய் சார்ந்த ஏற்றுமதித் துறைகளில் வளர்ச்சி காணப்படுவதாகவும் தெங்கு அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது. 

தேங்காய் பருப்பு சார்ந்த தயாரிப்புகள், தேங்காய் நார்க் கைத்தொழில் சார்ந்த தயாரிப்புகள் மற்றும் சிரட்டை சார்ந்த தயாரிப்புகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் இந்த ஏற்றுமதி வளர்ச்சிக்குப் பங்களிப்பு செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

MOST READ

காணொளி
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

Mobitel Upahara