Header Logo
Mogo Academy

செய்திகள்
பிரேசில் மற்றும் கனடா அணிகள் போராடி வெற்றி!

Jun 30, 2026 - 06:37 AM -

0

பிரேசில் மற்றும் கனடா அணிகள் போராடி வெற்றி!
Mobitel inner

2026 உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் 32 அணிகளுக்கு இடையிலான சுற்றில், ஜப்பானுக்கு எதிரான போட்டியில் பிரேசில் அணி 2க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

போட்டியின் 29ஆவது நிமிடத்தில் ஜப்பான் சார்பாக கைஷு சனோ (Kaishu Sano) ஒரு கோலைப் பெற்றார். 

அதனைத் தொடர்ந்து, 56ஆவது நிமிடத்தில் பிரேசில் அணி சார்பாக காசெமிரோ (Casemiro) ஒரு கோலை அடித்தார். 

பின்னர் போட்டியின் 90 நிமிடங்கள் நிறைவடைந்தபோது இரு அணிகளும் தலா ஒரு கோல் பெற்று சமநிலையில் இருந்தன. 

வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்காக வழங்கப்பட்ட மேலதிக நேரத்தின் இறுதி நிமிடத்தில், கேப்ரியல் மார்டினெல்லி (Gabriel Martinelli) ஒரு கோலை அடித்து பிரேசில் அணியின் வெற்றியை உறுதி செய்தார். 

இதேவேளை, 32 அணிகளுக்கு இடையிலான சுற்றின் மற்றுமொரு போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடிய கனடா அணி 1க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

போட்டியின் முதல் 90 நிமிடங்களுக்குள் இரு அணிகளாலும் கோல் எதனையும் பெற முடியவில்லை. 

இதனையடுத்து வழங்கப்பட்ட மேலதிக நேரத்தின்போது, ஸ்டீபன் யூஸ்டாக்கியோ (Stephen Eustáquio) ஒரு கோலை அடித்து கனடா அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

MOST READ

காணொளி
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

Mobitel Upahara