Header Logo
SLIC
பல்சுவை
ஐபோன் 18 ப்ரோ விலை குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

Jun 30, 2026 - 09:40 AM

ஐபோன் 18 ப்ரோ விலை குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!
Mobitel Inner 1278
EDEX Inner

ஆப்பிளின் வரவிருக்கும் முதன்மை மாடலான ஐபோன் 18, அதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு மிக அருகில் உள்ளது. அதற்கு முன்னதாக, தொடர்ந்து நிலவி வரும் "மெமரி விலை உயர்வு" சிக்கல்கள் காரணமாக, ஐபோன் 18 ப்ரோவின் விலைகள் முந்தைய ஐபோன் 17 ப்ரோ மாடல்களை விட அதிகமாக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சமீபத்தில் மேக், மேக்புக், ஐபாட் மற்றும் ஹோம்பாட் உள்ளிட்ட ஆப்பிள் நிறுவன மாடல்களின் விலை உலகளவில் உயர்த்தப்பட்ட நிலையில், இந்த தகவல் வெளியாகி உள்ளது. 

முன்னதாக ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் இதுபற்றி எச்சரித்து இருந்தார். அப்போது, விநியோக சங்கிலியை பாதித்து விலைகளை அதிகரிக்கக்கூடிய சூழல் பற்றி பேசியிருந்தார். உயர்ந்து வரும் மெமரி செலவுகள் தான் இந்த நிலைக்கு முக்கிய காரணம் ஆகும். 

ஆப்பிள் நிறுவனம் உலகளவில் தயாரிப்புகளின் விலைகளை 20% உயர்த்துவதன் மூலம் இந்த செலவுகளை வாடிக்கையாளர்கள் மீது சுமத்திய பிறகு, அவரது கணிப்பு சரியானது என நிரூபிக்கப்பட்டது. 

அதிகரித்து வரும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு மற்றும் நிறுவனங்கள் பெரிய உள்கட்டமைப்புகளை உருவாக்குவதால், மெமரி விலைகளில் ஏற்பட்ட உயர்வு, விநியோக சங்கிலியைப் பாதித்துள்ளது.

MOST READ

காணொளி
மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

Mobitel 1278