Header Logo
Mogo Academy

செய்திகள்
IMF பணிக்குழாமின் இலங்கை விஜயம் நிறைவு

Jun 30, 2026 - 11:27 AM -

0

IMF பணிக்குழாமின் இலங்கை விஜயம் நிறைவு
Mobitel inner

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணிக்குழாமினர் இன்றைய தினம் (30) நாட்டிலிருந்து புறப்படவுள்ளனர். 

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஆராய்வதற்கும், சர்வதேச நாணய நிதியத்தின் 'விரிவாக்கப்பட்ட நிதி வசதியின்' கீழ் செயல்படுத்தப்படும் பொருளாதார சீர்திருத்தங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடுவதற்காகவும் அவர்கள் கடந்த ஜூன் மாதம் 24ஆம் திகதி நாட்டிற்கு வருகை தந்திருந்தனர். 

மத்திய கிழக்கின் யுத்த சூழலுக்கு மத்தியிலும், இலங்கை அதிகாரிகள் எடுத்த விரைவான நடவடிக்கைகள் காரணமாக நாட்டின் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க முடிந்ததாக இந்த கலந்துரையாடலின் போது சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதானி ஈவன் பெபஜியோர்கியு (Evan Papageorgiou) தெரிவித்துள்ளார். 

அத்துடன், நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டம் காரணமாக இவ்வாறான நெருக்கடிகளுக்கு முகங்கொடுப்பதற்குத் தேவையான பலம் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

MOST READ

காணொளி
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

Mobitel Upahara