Jun 30, 2026 - 03:00 PM -
0
பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்து, வன்முறையாக நடந்துகொண்ட ஐந்து சந்தேக நபர்கள் வெயாங்கொடை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (29) மதியம் வெயாங்கொடை, வடத்தர பகுதியில் நடைபெற்ற 'மிஹிந்து பெரஹரா' நிமித்தம் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த போது, கெப் ரக வாகனமொன்றில் வந்த குழுவினர் இவ்வாறு பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 மற்றும் 21 வயதுடைய நிட்டம்புவ மற்றும் யக்கல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இச்சம்பவம் குறித்து வெயாங்கொடை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
