Header Logo
Mogo Academy

செய்திகள்
சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு

Jun 30, 2026 - 03:40 PM -

0

சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு
Mobitel inner

தொழில்நுட்பப் பிழைகள் காரணமாக மையப்படுத்தப்பட்ட மின்னணு அமைப்பில் பதிவு செயல்முறையை முடிக்க முடியாத அரசு அதிகாரிகள், தங்களது சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த கால அவகாசம் ஜூலை மாதம் 07ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிக்கை ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளது.

இந்த நீடிக்கப்பட்ட காலப்பகுதியில் தாமதக் கட்டணம் எதுவும் அறவிடப்பட மாட்டாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2026.03.31 அன்றைய நிலவரப்படியான வருடாந்த மற்றும் ஓய்வூதியத்திற்குப் பின்னரான சொத்து, பொறுப்பு விபரப் பிரகடனங்களை ஜூன் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இதற்கு முன்னர் அறிவித்திருந்தது.

இருப்பினும், சம்பந்தப்பட்ட பிரகடனங்களை ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என்றபோதிலும், அவ்வாறு சமர்ப்பிக்கும் பட்சத்தில் அபராதத் தொகைக்கு உட்பட நேரிடும் என்றும் அந்த ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, கடந்த 28ஆம் திகதி முதல் மத்திய மின்மறுப்பு அமைப்பிற்குள் ஒரே நாளில் அதிகளவான பயனர்கள் பிரவேசித்ததன் காரணமாக ஏற்பட்ட நெரிசலால், பிரகடனங்களைச் சமர்ப்பிப்பவர்கள் தொழில்நுட்பக் கோளாறுகளை எதிர்கொள்ள நேரிட்டதாகத் தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் பிரகாரம், சொத்து மற்றும் பொறுப்பு விபரப் பிரகடனங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய நபர்கள், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் நிறுவப்பட்டுள்ள மத்திய மின்னணு அமைப்பின் ஊடாக மட்டுமே தங்களது பிரகடனங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

சொத்து மற்றும் பொறுப்பு விபரப் பிரகடனங்களை மேற்கொள்வதற்கான மத்திய மின்னணு அமைப்பில் விபரங்களை உள்ளீடு செய்வது தொடர்பாக எழும் ஏதேனும் சிக்கல்கள் காணப்படின், ஆணைக்குழுவின் சொத்து மற்றும் பொறுப்பு விபரப் பிரகடனப் பிரிவின் 076 70 11 954 மற்றும் 011 25 87 287 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொண்டு அவற்றைத் தீர்த்துக் கொள்ளுமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.
 
MOST READ

காணொளி
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

Mobitel Upahara