Header Logo
SLIC
பல்சுவை
Fast Food பிரியர்களே அலர்ட்!

Jul 1, 2026 - 03:14 PM

Fast Food பிரியர்களே அலர்ட்!
Mobitel Inner 1278
EDEX Inner

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் இரவு நேர வேலை செய்பவர்கள் மத்தியில் நள்ளிரவில் ஃபாஸ்ட் புட் சாப்பிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. 

பீட்சா, பர்கர், ஃபிரைடு சிக்கன், ஷவர்மா, பிரெஞ்ச் ஃப்ரைஸ், நூடுல்ஸ் போன்ற துரித உணவுகள் எளிதில் கிடைப்பதாலும், சுவையாக இருப்பதாலும் அவை அதிகம் விரும்பப்படுகின்றன. ஆனால் இந்தப் பழக்கம் உடல்நலத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என வைத்தியர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். 

பல சர்வதேச ஆய்வுகள், அதிக அளவில் பதப்படுத்தப்பட்ட துரித உணவுகளை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு இதய நோய், நீரிழிவு, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சில வகை புற்றுநோய்களின் அபாயம் அதிகரிப்பதாக தெரிவிக்கின்றன. இந்த நோய்கள் நீண்டகாலத்தில் ஆயுட்காலத்தையும் பாதிக்கக்கூடும் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. 

நமது உடலின் உயிரியல் கடிகாரம் இரவு நேரத்தில் ஓய்வெடுக்கும்படி அமைந்துள்ளது. அந்த நேரத்தில் அதிக கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை சாப்பிடும்போது, செரிமானம் மெதுவாக நடைபெறும், கொழுப்பு எளிதில் சேமிக்கப்படும், ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கலாம், தூக்கத்தின் தரம் பாதிக்கப்படும், அடுத்த நாள் சோர்வு மற்றும் கவனக்குறைவு ஏற்படலாம். 

துரித உணவில் இருக்கும் அபாயங்கள், 

அதிக கலோரி மற்றும் கொழுப்பு. 

அதிக உப்பு - இதனால் ரத்த அழுத்தம் உயரும். 

அதிக சர்க்கரை; நீரிழிவு அபாயம் அதிகரிக்கும். 

நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் குறைவு. 

செயற்கை நிறமிகள், சுவையூட்டிகள் அதிகம். 

என்னென்ன நோய்கள் வரலாம்? 

தொடர்ச்சியாக ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுபவர்களுக்கு, 

உடல் பருமன் 

வகை-2 நீரிழிவு 

இதய நோய் 

கொழுப்பு கல்லீரல் 

உயர் ரத்த அழுத்தம் 

செரிமான கோளாறுகள் 

சில வகை புற்றுநோய்கள் 

மனஅழுத்தம் மற்றும் மனநல பாதிப்புகள் ஆகியவற்றின் அபாயம் அதிகரிக்கலாம். 

எப்படி தவிர்ப்பது? 

நள்ளிரவில் கனமான உணவுகளைத் தவிர்க்கவும். 

இரவு உணவை முன்கூட்டியே சாப்பிடும் பழக்கத்தை உருவாக்கவும். 

பசி எடுத்தால் பழங்கள், பருப்பு வகைகள், தயிர் அல்லது வெந்நீர் பால் போன்ற ஆரோக்கியமான சிற்றுண்டிகளைத் தேர்வு செய்யவும். 

தினமும் குறைந்தது 7-8 மணி நேரம் தூங்கவும். 

வாரத்தில் பெரும்பாலான நாட்களில் வீட்டில் சமைத்த சத்தான உணவுகளை சாப்பிடவும். 

வைத்தியர்களின் அறிவுரை, 

ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை எப்போதாவது சாப்பிடுவது மட்டுமே பெரிய பிரச்சனையாக இருக்க வேண்டியதில்லை. ஆனால் தினசரி அல்லது அடிக்கடி, குறிப்பாக நள்ளிரவில், இத்தகைய உணவுகளை உட்கொள்வது நீண்டகால உடல்நல பாதிப்புகளுக்கு வழிவகுக்கலாம். சமநிலையான உணவு, உடற்பயிற்சி மற்றும் போதுமான தூக்கம் ஆகியவை ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முக்கியமானவை. 

நாக்கிற்கு ருசி, உடலுக்கு விஷம்! எப்போதாவது ஒருமுறை சாப்பிடுவது பரவாயில்லை, ஆனால் இதையே வழக்கமாக்கிக் கொள்ளக் கூடாது.


MOST READ

காணொளி
மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

Mobitel 1278