Header Logo

விளையாட்டு
நீ ஏன் என்ன பார்க்க வந்தனு தோனி கேட்டார்!

Jul 1, 2026 - 06:47 PM -

0

நீ ஏன் என்ன பார்க்க வந்தனு தோனி கேட்டார்!

இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால வீரர்கள் வரிசையில் நம்பிக்கை கொடுக்கும் வீரராக வளர்ந்துள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த சாய்சுதர்சன். இந்தியாவிற்காக டெஸ்ட் கேப்பை பெற்றிருக்கும் சாய் சுதர்சன், 3 வடிவ வீரராக வளரவேண்டும் என்ற வேட்கையுடன் இருந்து வருகிறார். 

இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் அவர், தமிழகத்தைச் சேர்ந்தவர் என்கிற வகையில் சிஎஸ்கே அணியை பார்த்து தான் வளர்ந்தேன் என்றும், பலமுறை சிஎஸ்கேவிற்காக விளையாட வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும் பகிர்ந்துள்ளார். 

கோபிநாத் உடனான உரையாடலில் பேசியிருக்கும் அவர், “சேப்பாக்கத்தில் மைதானம் நிரம்பிய கிரவ்டுக்கு நடுவில் விளையாடுவது கடினமான விசயமாக இருக்கும். கடந்தமுறை நம்முடைய சொந்த மண்ணில் சிறப்பாக விளையாட முடியவில்லை, இந்தமுறை நிச்சயம் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. 

எனக்கு புடிச்ச மைதானம் சேப்பாக்கம், நம்முடைய ஹோம் கிரவுண்ட். சிஎஸ்கேவிற்காக விளையாட வேண்டும் என்ற ஆசை பலமுறை தோன்றியுள்ளது. சின்னவயசுல இருந்து பார்த்துவளர்ந்த டீம் சிஎஸ்கே. என் ஸ்கூல் போறவழியில தான் சிஎஸ்கே வீரர்களோட பஸ் போகும், பலமுறை பஸ் பின்னாடியே போன அனுபவம்லாம் இருக்கு” என கூறினார். 

மேலும் ஜஸ்பிரித் பும்ரா, தோனி, கோலி உடனான சிறந்த தருணங்கள் குறித்து பேசிய அவர், ஒருமுறை தோனியை பார்க்க போயிருந்தன், அப்போ தான் சிஎஸ்கேவுக்கு எதிரா செஞ்சுரி அடிச்சிருந்தன், அவர் என்ன பார்த்ததும், நீ ஏன் என்கிட்ட பேச வந்திருக்க, நீ நல்லாதான விளையாடிட்டு இருக்கன்னு சொன்னாரு. 

அதேபோல விராட் கோலி இந்த வருசமும் உனக்கு கிரேட் சீசன்னு பாராட்டியிருந்தார். கடந்த சீசன் ஐபிஎல் முடியும்போது நான் அவார்டு நிகழ்ச்சிக்காக நின்னுட்டிருந்தன், அப்போ ஜஸ்பிரித் பும்ரா வந்து என்ன தட்டிகொடுத்து கிரேட் சீசன்னு சொன்னாரு, இதெல்லாம் சிறந்த மொமண்ட்ஸா இருந்திருக்கு என கூறினார்.


MOST READ

காணொளி
பேருந்து ஊழியர்களுக்கு சீருடை!

பேருந்து ஊழியர்களுக்கு சீருடை!

'சிசு செரிய'

'சிசு செரிய'

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

தமிழில் உரையாற்றிய அமைச்சர்!

தமிழில் உரையாற்றிய அமைச்சர்!

தேர்தலுக்கு அஞ்சினால் ஆட்சி நீடிக்காது - சுமந்திரன்

தேர்தலுக்கு அஞ்சினால் ஆட்சி நீடிக்காது - சுமந்திரன்