Jul 1, 2026 - 07:50 PM -
0
இயக்குவதற்கான இயந்திர வலு ( Power Set) பற்றாக்குறை காரணமாக, களனிவெளி ரயில் மார்க்கத்தின் இரண்டு பிரதான ரயில் சேவைகளை மறு அறிவித்தல் வரை இரத்து செய்ய ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் பிரதம செயலாளர் கசுன் சாமர ஜயசேகர விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இரத்து செய்யப்பட்டுள்ள ரயில் சேவைகள் பின்வருமாறு,
பிற்பகல் 04.00: கொழும்பு கோட்டையிலிருந்து அவிசாவளை நோக்கி பயணிக்கும் ரயில்.
முற்பகல் 05.55: அவிசாவளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கும் ரயில்.
இந்த இரண்டு ரயில் சேவைகளும் இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளன.
தற்போது ரயில்வே திணைக்களத்திற்குள் தொடர்ச்சியாக ரயில் சேவைகள் இரத்து செய்யப்படுவது பதிவாகி வருவதுடன், அது இப்போது ஒரு சாதாரண நிலைமையாக மாறி வருவதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவிக்கிறது.
குறிப்பாக, காரியாலய ஊழியர்கள் மற்றும் நாளாந்தப் பயணிகள் பெருமளவில் பயணிக்கும் இவ்வாறான பரபரப்பான நெருக்கடிமிக்க நேரங்களில் ரயில்கள் இரத்து செய்யப்படுவதால், நாளுக்கு நாள் பயணிகள் கடும் அசௌகரியங்களுக்கும் பாதிப்புகளுக்கும் உள்ளாகி வருவதாகவும் அச்சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

