Header Logo
Mogo Academy

சினிமா
இம்மாதம் வெளியாகிறதா ‘ஜனநாயகன்’?

Jul 2, 2026 - 09:33 AM -

0

இம்மாதம் வெளியாகிறதா ‘ஜனநாயகன்’?
Mobitel inner

எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘ஜனநாயகன்’. கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரைக்கு வர இருந்த இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் படம் திரைக்கு வருவதில் இழுபறி நீடித்து வருகிறது. இது ஒருபுறமிருக்க ‘ஜனநாயகன்’ படம் ஆன்லைனில் கசிந்ததால் பலரும் கைதாகி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதனிடையே, விஜய் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. 

இதனால் ‘ஜனநாயகன்’ படம் வெளியீட்டு திகதி குறித்த உறுதிப்படுப்படாத தகவல்கள் ஒவ்வொரு மாதமும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. 

இந்த நிலையில், இன்று (02) ‘ஜனநாயகன்’ படம் வெளியீடு குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ள தகவலின் படி, ‘ஜனநாயகன்’ படத்திற்கான தணிக்கைச் சான்றிதழ் அடுத்த 3 நாட்களுக்குள் கிடைக்கும் என்றும் இப்படத்தை இந்த மாதமே வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 

‘ஜனநாயகன்’ படம் ஜூலை 16 ஆம் திகதி அல்லது ஜூலை 23 ஆம் திகதி ஆகிய திகதிகளில் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது. இந்த வாரமே தமிழ்ப் பதிப்பிற்கான தணிக்கை பணிகள் நிறைவடைந்தாலும், பிற மொழிகளுக்கான தணிக்கை நடைமுறைகள் முடிய சுமார் ஒரு வாரம் ஆகலாம். அதன் பின்னரே படத்தின் இறுதி வெளியீட்டுத் தேதி உறுதி செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. 

முன்னதாக, ‘ஜனநாயகன்’ படம் வெளியீட்டு திகதி குறித்த பல்வேறு யூகங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் தற்போது உலா வரும் தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara