Header Logo
SLIC
வணிகம்
பயன்படுத்திய வாகனங்களின் கொள்வனவு, விற்பனை மற்றும் தரம் உயர்த்தலுக்கான ஒரே கூரையின் கீழான தீர்வாக 'Auto Direct' தளத்தை அறிமுகப்படுத்தும் Evolution Aut

Jul 8, 2026 - 02:41 PM

பயன்படுத்திய வாகனங்களின் கொள்வனவு, விற்பனை மற்றும் தரம் உயர்த்தலுக்கான ஒரே கூரையின் கீழான தீர்வாக 'Auto Direct' தளத்தை அறிமுகப்படுத்தும் Evolution Aut
Mobitel Inner 1278
EDEX Inner

இலங்கையில் மின்சார வாகனங்களின் (EVs) அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான Evolution Auto நிறுவனம், வாகனக் கொள்வனவு, விற்பனை மற்றும் வாகனங்களை மாற்றிக் கொள்வதற்கான சேவைகளை (trade-in services) ஒரே கூரையின் கீழ் வழங்கும் அர்ப்பணிக்கப்பட்ட தளமான ‘Auto Direct’ தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சவால்கள் நிறைந்த வாகன சந்தையில் இலங்கை வாகன உரிமையாளர்களுக்கு ஒரு கட்டமைக்கப்பட்ட, வெளிப்படையான மாற்று திட்டத்தை இது வழங்குகிறது. 

விலையின் நிச்சயமற்ற தன்மை, மாறிவரும் சந்தை நிலை மற்றும் கொள்வனவாளர்களின் குறைந்து வரும் எதிர்பார்ப்பு ஆகியவற்றின் காரணமாக, பெற்றோல், டீசல், ஹைப்ரிட் வாகனங்களின் உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை விற்பனை செய்வதில் அதிக சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த சிக்கல்களுக்குத் தீர்வுகாணும் வகையில், தரகர்கள் மற்றும் இடைத்தரகர்களைத் தவிர்த்து நேரடியாக பரிவர்த்தனை செய்யும் ஒரு கட்டமைப்பாக Auto Direct தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

வாடிக்கையாளர்கள் ஒரு புதிய மாதிரிக்கு செல்வதற்காக (upgrade) தங்களது வாகனங்களை கொடுத்து மாற்றிக் கொள்ள முடியும், அல்லது சோதனை செய்யப்பட்ட ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட வாகனங்களைக் கொள்வனவு செய்ய முடியும் அல்லது தற்போதிருக்கும் வாகனங்களை இந்தத் தளத்தின் ஊடாக விற்பனை செய்ய முடியும். Auto Direct மூலம் வழங்கப்படும் ஒவ்வொரு வாகனமும் சந்தை அடிப்படையிலான மதிப்பு நிர்ணயம், உரிமை சரிபார்ப்பு மற்றும் பராமரிப்புப் பதிவு சரிபார்ப்பு (maintenance record validation) உள்ளிட்ட பல்வேறு விரிவான ஆய்வு நடைமுறைக்கு உட்படுத்தப்படுகிறது. 

இது குறித்து, Evolution Auto நிறுவனத்தின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி விரான் டி சொய்சா கருத்துத் தெரிவிக்கையில், "சில வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட, வாகன உரிமையாளர்கள் தற்போது மிகவும் சிக்கலான ஒரு சந்தையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தாங்கள் நம்பிக்கையுடன் கொள்வனவு செய்யும் கொள்வனவாளர்கள் தொடர்பில் கண்டறிவதிலோ, தங்களது வாகனங்களுக்கு நியாயமான மதிப்பை நாடுவதிலோ பலர் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். இவ்வாறான பிரச்சினைக்குத் தீர்வாகவே Auto Direct உருவாக்கப்பட்டுள்ளது. எமது தளத்தின், மதிப்பு நிர்ணய செயன்முறையின் வெளிப்படைத் தன்மை, சரிபார்க்கப்பட்ட வாகனங்கள், நேரடிப் பரிவர்த்தனைகள் காரணமாக வாடிக்கையாளர்கள் தற்போது அதிக நம்பிக்கையுடன் வாங்கவோ, விற்கவோ அல்லது பரிமாறிக் கொள்ளவோ முடியும்.” என்றார். 

உயர்தர மின்சார வாகனங்கள் போன்ற மேம்பட்ட வாகன தொழில்நுட்பங்களுக்கு மாற விரும்பும் வாடிக்கையாளர்கள், இந்தத் தளத்தின் மூலம் அதனை எளிதாக மேற்கொள்ள முடியும். ஒரு கட்டமைக்கப்பட்ட பரிமாற்ற செயன்முறையின் மூலம், தமது தற்போதைய வாகனங்களை மாற்றிக் கொள்ள முடியும். வாடிக்கையாளர்கள் அவற்றை வழங்கி, Evolution Auto நிறுவனத்தினால் வழங்கப்படும் Avatr, IM Motors, Xpeng, Riddara, KYC போன்ற வர்த்தகநாமங்களுக்கு மாற்றிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இடைத்தரகர்கள் பலர் சம்பந்தப்படக்கூடிய வழக்கமான வாகனப் பரிவர்த்தனைகளைப் போலன்றி, Auto Direct இந்த செயன்முறையை நேரடியாக நிர்வகிப்பதுடன், மதிப்பு நிர்ணயம் முதல் கொள்வனவு அல்லது கொடுத்து மாற்றிக் கொள்ளுதல் வரை வாடிக்கையாளர்களுக்கு ஒரே ஒரு தொடர்பு மையத்தை அது வழங்குகிறது. 

Auto Direct இன் அறிமுகத்தின் மூலம், Evolution Auto நிறுவனம் வெறுமனே வாகனங்களை விற்பனை செய்வதற்கு அப்பால், வசதி, நியாயமான விலை, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு முழுமையான வாகனத்திற்கான உரிமைமைய அடையும் சூழலை வழங்குகிறது. 

மேலதிக விபரங்களுக்கு, evautodirect.lk அல்லது 0777 553 355 எனும் இலக்கத்தைத் தொடர்பு கொள்ளவும்.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278