Header Logo
SLIC
செய்திகள்
எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவனத்திற்கு புதிய இயந்திரங்கள்!

Aug 28, 2026 - 08:26 AM

எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவனத்திற்கு புதிய இயந்திரங்கள்!
Mobitel Inner 1278
EDEX Inner

எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கும் நோக்கில், 110 மில்லியன் ரூபாய் பெறுமதியான புதிய இயந்திரங்கள் மற்றும் செயல்பாட்டு வாகனங்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

 

அதற்கமைய, குறித்த புதிய இயந்திரங்கள் மற்றும் செயல்பாட்டு வாகனங்களை உத்தியோகபூர்வமாக பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று (27) தொழில்கள் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தியின் தலைமையில் நடைபெற்றது.

 

இத்திட்டத்தின் கீழ் 79 மில்லியன் ரூபாய் செலவில் இரண்டு வீல் லோடர்கள், 18 மில்லியன் ரூபாய் செலவில் இரண்டு டிப்பர் ரக வாகனங்கள் மற்றும் 13 மில்லியன் ரூபாய் செலவில் இரண்டு போர்க்லிஃப்ட் இயந்திரங்கள் நிறுவனத்தின் செயல்பாட்டுப் பணிகளுக்காகச் சேர்க்கப்பட்டுள்ளன.

 

அத்துடன், நிறுவனத்தின் செயல்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் தெரிவு செய்யப்பட்ட புதிய சாரதிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்குவதும் அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்டது.

 

இதேவேளை, கடந்த 20 மாத காலத்தில் எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவனம் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

அக்காலப்பகுதியில் 76 மில்லியன் ரூபாய் செலவில் புதிய முடிவுற்ற பொருட்களுக்கான களஞ்சியசாலை ஒன்றை அமைத்தல், நீண்டகாலமாக செயலிழந்திருந்த டிராக்டர் இயந்திரத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வருதல், உத்தியோகபூர்வ இணையதளம் மற்றும் Sales Hotline சேவையை மீண்டும் ஆரம்பித்தல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

 

நுகர்வோர் நம்பிக்கையையும் வெளிப்படைத்தன்மையையும் அதிகரிக்கும் நோக்கில் உற்பத்திகளின் அதிகபட்ச சில்லறை விலையை அச்சிடுதல், 2026–2030 புதிய மூலோபாயத் திட்டத்தை வெளியிடுதல், APM எண்ணெய் உரத்தை சந்தைக்கு அறிமுகப்படுத்துதல் மற்றும் ERP Sample குறைந்த விலையில் வழங்குதல் என்பனவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

இதற்கு மேலதிகமாக, Dealers Network பதிவுகளை மேற்கொள்வதுடன் நிறுவனத்தின் லொறி வாகனங்கள் மூலமாகவே உற்பத்திகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்து, நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டு வலையமைப்பையும் முறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

இந்நிகழ்வில் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிலின் சமரகோன், எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் தலைவர் ஆனந்த பிரேமகுமார உள்ளிட்ட நிறுவனத்தின் நிர்வாகத்தினரும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278