Header Logo
SLIC
வணிகம்
பேபி செரமி வர்த்தகநாமத்தின் பிரத்தியேக உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் நீதிமன்ற தீர்ப்பு

Jul 8, 2026 - 02:47 PM

பேபி செரமி வர்த்தகநாமத்தின் பிரத்தியேக உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் நீதிமன்ற தீர்ப்பு
Mobitel Inner 1278
EDEX Inner

இலங்கையின் மிகவும் நம்பகமான குழந்தை பராமரிப்பு வர்த்தகநாமமான Baby Cheramy (பேபி செரமி), தனது வர்த்தகநாம அடையாளம் மற்றும் புலமைச் சொத்துகளுக்கான பிரத்தியேக உரிமையையும் அங்கீகாரத்தையும் நீதிமன்றம் ஊடாக உறுதிப்படுத்தி, தனது தனித்துவத்தைப் பாதுகாத்துள்ளது. நுகர்வோர் மற்றும் வர்த்தக பங்காளர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய, ‘Baby Sherami’ எனும் பெயரில், ஏமாற்றும் வகையில் போலியாக உருவகப்படுத்தப்பட்ட வர்த்தகநாமம் ஒன்றின் உருவாக்கத்திற்கு எதிராகவே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

நீதிமன்றத்தின் தீர்ப்பானது, Baby Cheramy வர்த்தகநாமத்தின் வர்த்தகநாம பெயர் மற்றும் அடையாளத்தின் மீதான அதன் தனித்துவமான மற்றும் சட்டபூர்வமான உரிமையை எவ்வித சந்தேகமுமின்றி உறுதிப்படுத்தியதோடு, உருவத்திலோ, உச்சரிப்பிலோ அல்லது கருத்தியல் ரீதியிலோ மேற்கொள்ளப்படும் அங்கீகரிக்கப்படாத எந்தவொரு போலி உருவாக்கமும் நிறுவனத்தின் புலமைச் சொத்துரிமைகளை மீறும் செயலாகும் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தீர்ப்பானது பேபி செரமி வர்த்தகநாமத்திற்கு வழங்கப்பட்டுள்ள சட்டபூர்வ பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், தலைமுறை தலைமுறைகளாக இலங்கை குடும்பங்களால் நம்பப்படும் அசல் மற்றும் உண்மையான வர்த்தகநாமம் எனும் அதன் நீண்டகால நற்பெயரையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. 

இவ்வர்த்தகநாமம் மீது நுகர்வோர் வைத்துள்ள நம்பிக்கையை பாதுகாப்பதற்கும், வர்த்தகநாமத்தின் நம்பகத்தன்மையை பேணுவதற்கும், போலி அல்லது தவறான தயாரிப்புகள் சந்தைக்குள் நுழைவதைத் தடுப்பதற்கும் பேபி செரமி தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் அர்ப்பணிப்பின் ஒரு அங்கமாகவே இந்த சட்ட நடவடிக்கை ஆரம்பிக்ப்பட்டது. உண்மையான பேபி செரமி வர்த்தகநாமத்தை நெருக்கமாக ஒத்திருக்கும் பெயர்கள் மற்றும் உருவகங்ளைக் கொண்ட வர்த்தகநாமங்களால் பெற்றோர்களும் பராமரிப்பாளர்களும் ஏமாற்றப்படுவதை தடுப்பதற்காக இந்நிறுவனம் உறுதியான மற்றும் செயலூக்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 

இது குறித்து நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவிக்கையில், “இந்த நீதிமன்றத் தீர்ப்பானது Baby Cheramy இன் பிரத்தியேக உரிமைகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள பெற்றோர்கள் எம் மீது வைத்துள்ள நம்பிக்கையைப் பாதுகாப்பதில் எமக்கிருக்கும் அயராத அர்ப்பணிப்பு ஆகியவற்றின் தெளிவான மற்றும் தீர்க்கமான அங்கீகாரமாகும். எமது வர்த்தகநாமத்தை அடையாளத்தை போலியாக உருவாக்க அல்லது தவறாக பயன்படுத்த முயற்சிக்கும் எந்தவொரு தரப்பிற்கும் எதிராக, உரிய அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் நாம் தொடர்ச்சியாக முன்னெடுப்போம். எமது நுகர்வோரை பாதுகாப்பதும், Baby Cheramy உடன் தொடர்புடைய நம்பகத்தன்மை, பாதுகாப்பு, தரம் ஆகியவற்றை பேணுவதும் எமது முதன்மையான முன்னுரிமையாக தொடர்கிறது.” என்றார். 

எந்தவொரு வகையிலாவது Baby Cheramy வர்த்தகநாமத்தை பிரதி செய்யும் அல்லது போலியாக உருவாக்க முயற்சிக்கும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு எதிராக உடனடி மற்றும் தீர்க்கமான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் நிறுவனம் எச்சரித்துள்ளது. அத்துடன், நுகர்வோர், விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் விழிப்புடன் இருக்குமாறும், உண்மையான Baby Cheramy தயாரிப்புகளை மாத்திரமே கொள்வனவு செய்வதையும் கையிருப்பில் வைத்திருப்பதையும் உறுதி செய்யுமாறும் Baby Cheramy வேண்டுகோள் விடுக்கிறது. 

இந்த தீர்ப்பானது பேபி செரமியின் புலமைச் சொத்துகளை பாதுகாப்பது மட்டுமன்றி, நெறிமுறைசார்ந்த, வெளிப்படையான மற்றும் நுகர்வோரை மையமாகக் கொண்ட ஒரு வர்த்தகநாமமாக அதன் நிலையை மேலும் வலுப்படுத்துகிறது. சந்தையை தீவிரமாக கண்காணித்து, போலி தயாரிப்புகளுக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கை எடுப்பதன் மூலம், நுகர்வோரை பாதுகாப்பதற்கும், தரம் மற்றும் நம்பிக்கையின் மிக உயர்ந்த தரநிலைகளை பேணுவதற்கும், மிருதுவான மற்றும் நம்பகமான குழந்தை பராமரிப்புத் தயாரிப்புகளை வழங்குவதற்கும் தனக்குள்ள பொறுப்பை Baby Cheramy தொடர்ந்தும் நிலைநிறுத்தி வருகிறது. 

Hemas Consumer Brands பற்றி 

இலங்கையின் வீடுகள் மற்றும் தனிநபர் பராமரிப்பு பொருட்கள் துறையில் 65 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னிலை வகிக்கும் Hemas Consumer Brands நிறுவனம், ஒரு சிறந்த எதிர்காலத்தை நோக்கிய குடும்பங்களின் இலட்சியங்களை வலுவூட்டுவதில் கவனம் செலுத்துகிறது. இலங்கையில் நுகர்வோரின் தேவைகளுக்கு பொருத்தமான புத்தாக்கமான தயாரிப்புகளை உருவாக்குவதற்கு உள்ளூர் தரவுகளை பயன்படுத்துவதில் இந்நிறுவனம் பெருமிதம் கொள்கிறது. இது அதன் நோக்கம் சார்ந்த வர்த்தகநாமங்களை இலங்கையில் நம்பகமான வீட்டுப் பெயர்களாக நிலைநிறுத்த உதவியுள்ளது. இலங்கை நுகர்வோர் பற்றிய ஆழமான புரிதல் மற்றும் தனது தயாரிப்புகள் மூலம் சிறந்த தரம் மற்றும் மதிப்பை வழங்குவதற்கான அயராத அர்ப்பணிப்பு ஆகியவற்றால் வழிநடத்தப்படும் Hemas Consumer Brands ஆனது, நாடு முழுவதும் உள்ள சமூகங்களின் வாழ்க்கையை தொடர்ச்சியாக வளப்படுத்தி வருகிறது.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278