Jul 8, 2026 - 02:51 PM -
0
Vietjet நிறுவனம் ஜூலை Double Day (7/7) கொண்டாட்டத்தை முன்னிட்டு, 2026 ஜூலை 7 முதல் 9 ஆம் திகதி வரை மூன்று நாட்களுக்கு விசேட சலுகைகளை அறிவித்துள்ளது. இலங்கையிலிருந்து பயணம் செய்வோருக்கு, தற்போது தமது அடுத்த விடுமுறைப் பயணத்தைக் குறைந்த செலவில் திட்டமிடுவதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த விமானச் சேவையின் புதிய Colombo – Ho Chi Minh City வழித்தடத்தில், பயணிகள் வரிகள் மற்றும் கட்டணங்கள் உள்ளடங்கலாக ஒரு வழிப் பயணத்திற்கான Eco ரக டிக்கெட்களை 90 அமெரிக்க டொலர் முதலும், அத்துடன் SALE77 என்ற promo code பயன்படுத்தி Deluxe மற்றும் SkyBoss ஆகியவற்றின் அடிப்படை விமானக் கட்டணங்களில் 20% தள்ளுபடியையும் பெற்றுக்கொள்ள முடியும். Vietjet இன் பரந்த விமான வலையமைப்பிற்குட்பட்ட வியட்நாமின் உள்நாட்டு மற்றும் ஏனைய சர்வதேச வழித்தடங்களுக்கும் இந்தத் தள்ளுபடிகள் கிடைக்கப் பெறுகின்றன.
இந்த விசேட சலுகை, 2026 ஆகஸ்ட் 18 ஆம் திகதி அன்று ஆரம்பமாகவுள்ள Vietjet நிறுவனத்தின் கொழும்பு மற்றும் Ho Chi Minh City இடையிலான முதலாவது அங்குரார்ப்பண விமானச் சேவைக்குச் சில வாரங்களுக்கு முன்னதாக வழங்கப்பட்டுள்ளது. செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் வாரத்திற்கு மூன்று முறை இயக்கப்படவுள்ள இந்த ஐந்து மணித்தியால விமானப் பயணம், இலங்கை பயணிகளுக்கு வியட்நாமுக்கான இலகுவான அணுகலை வழங்குவதுடன், ஆசியா, அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா ஆகிய பிராந்தியங்களில் விரிவடைந்து வரும் Vietjet இன் விமான வலையமைப்பின் ஊடாக அடுத்தடுத்த இடங்களுக்கான இணைப்புச் சேவைகளையும் வழங்குகின்றது.
இந்தச் சலுகைகள் 2026 ஆகஸ்ட் 15 முதல் 2027 மார்ச் 31 வரையான காலப்பகுதியிலான பயணங்களுக்கு செல்லுபடியாகும் (பொது விடுமுறை தினங்கள் மற்றும் பண்டிகைக் கால பயணக் காலப்பகுதிகள் தவிர்ந்த). www.vietjetair.com என்ற இணையத்தளம் அல்லது “Vietjet Air” mobile app ஊடாகப் பதிவு செய்யும்போது மட்டுமே இந்த விசேட சலுகைக்கால Eco கட்டணம் கிடைக்கும். அத்துடன், பிரீமியம் கட்டணங்களுக்கான 20% தள்ளுபடி, Vietjet இன் அனைத்து விற்பனை வழிகளுக்கும் பொருந்தும்.
மேலும், Vietjet நிறுவனம் விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ள வியட்நாமின் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்நாட்டு வழித்தடங்களின் Eco கட்டணங்களுக்கும் விசேட தள்ளுபடிகளை வழங்குகின்றது. இது அந்நாட்டிற்குள் பல இடங்களுக்கும் பயணிக்கத் திட்டமிடும் பயணிகளுக்கு இன்னமும் கூடுதலான நன்மையையும் பெறுமதியையும் அளிக்கின்றது.
ஒரு குறுகிய காலச் சுற்றுலா, கலாசாரப் பயணம் அல்லது வணிகப் பயணம் என எதுவாக இருந்தாலும், Vietjet நிறுவனத்தின் ஜூலை Double Day ஊக்குவிப்புத் திட்டத்தினூடாக, இலங்கை பயணிகளுக்கு வியட்நாமுக்கும் அதற்கப்பாலுள்ள ஏனைய இடங்களுக்கும் மிகக் குறைந்த கட்டணத்தில் தங்களது பயணங்களை உறுதி செய்வதற்கான சிறந்ததொரு வாய்ப்பை வழங்குகின்றது. இந்த விதிவிலக்கான சேமிப்புகளுக்கு அப்பால், Deluxe சலுகை, குறைந்த விலையுடன் கூடுதல் நெகிழ்வுத்தன்மையையும் வழங்குகிறது. இதில் 20 கிலோகிராம் வரையிலான செக்- இன் பொதிகள், இலவச இருக்கை தெரிவு மற்றும் நெகிழ்வான பயணத்திட்ட மாற்றங்கள் (நிபந்தனைகளுக்கு உட்பட்டது) ஆகியன உள்ளடங்குகின்றன. மேலும் ஒரு உயர்தரமான பயண அனுபவத்திற்கு, SkyBoss பிரீமியம் சேவைகள், கனிவான உபசரிப்பு, பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட விமானத்தினுள்ளான உணவு வசதிகள் மற்றும் வணிக மற்றும் பொழுதுபோக்கு பயணிகள் இருவருக்குமேற்றவாறு வடிவமைக்கப்பட்ட தடையற்ற பயண அனுபவத்தை வழங்குகின்றது.
Vietjet நிறுவனம் தனது விரிவடைந்து வரும் விமான வலையமைப்பு, எரிபொருள்- திறன்மிக்க விமானங்கள் மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட சேவைகள் ஆகியவற்றின் மூலம், விமானப் பயணங்களை மேலும் மலிவானதாகவும் எளிதாக அணுகக்கூடியதாகவும் மாற்றி வருவதுடன், ஒவ்வொரு விமானப் பயணத்திலும் ஒரு வசதியான மற்றும் மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்குகின்றது.
பயணிகள் pho, banh mi மற்றும் வியட்நாமிய ஐஸ் மில்க் கோப்பி போன்ற விருப்பமான உணவுகள் உள்ளடங்கலாக, வியட்நாமிய மற்றும் சர்வதேச உணவு முறைகளால் ஈர்க்கப்பட்டு, புதிதாகத் தயாரிக்கப்பட்ட சூடான உணவுகளைச் சுவைக்க முடியும். Vietjet இன் அர்ப்பணிப்புடன் கூடிய விண்பயணக் குழுவினரின் கனிவான உபசரிப்பு மற்றும் விசேட தருணங்களில் நடத்தப்படும் தனித்துவமான விமானத்தினுள்ளான கலாசாரக் கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் மூலம், ஒவ்வொரு பயணமும் ஒரு மறக்கமுடியாத பயண அனுபவமாக மாறுகின்றது.
Vietjet பற்றி:
புதுயுக விமானச் சேவை நிறுவனமான Vietjet, வியட்நாமின் வான்வழித் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பிராந்திய அளவிலும் உலகளாவிய ரீதியிலும் ஒரு முன்னோடி விமானச் சேவையாகத் திகழ்ந்து வருகின்றது. இந்நிறுவனம் தற்போது 135 விமானங்களைக் கொண்ட கட்டமைப்பை இயக்கி வருவதுடன், பரந்த மற்றும் குறுகிய உடல் அமைப்பைக் கொண்ட இருவகை விமானங்களையும் உள்ளடக்கியதாக கிட்டத்தட்ட 600 புதிய விமானங்களுக்கான கொள்வனவுப் பதிவுகளையும் மேற்கொண்டுள்ளது. செலவின முகாமைத்துவத் திறன், பயனுள்ள செயல்பாடுகள் மற்றும் செயற்திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதுடன், அனைத்து நடவடிக்கைகளிலும் அதிநவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தி புதிய போக்குகளுக்குத் தலைமை வகிக்கும் Vietjet, வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பலதரப்பட்ட சேவைகளுடன் கூடிய கட்டணச் சேமிப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மை மிக்க வான்வழிப் பயண வாய்ப்புகளை வழங்குகின்றது.
Vietjet நிறுவனம், சர்வதேச வான்வழிப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) செயற்பாட்டு பாதுகாப்பு கணக்காய்வு (IOSA) சான்றிதழைப் பெற்ற ஒரு முழு அளவிலான அங்கத்துவ நிறுவனமாகும். வியட்நாமின் மிகப்பெரிய தனியார் விமானச் சேவை நிறுவனமான இதற்கு, உலகின் ஒரே ஒரு பாதுகாப்பு மற்றும் தயாரிப்பு மதிப்பீட்டு இணையத்தளமான airlineratings.com நிறுவனத்தினால் பாதுகாப்பிற்கான மிக உயர்ந்த 7 நட்சத்திர அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், Airfinance Journal இனால் தொடர்ந்து பல வருடங்களாக ஆரோக்கியமான நிதிநிலை மற்றும் செயல்பாடுகளைக் கொண்ட உலகின் சிறந்த 50 விமானச் சேவை நிறுவனங்களில் ஒன்றாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. அத்துடன், Skytrax, CAPA, Airline Ratings போன்ற புகழ்பெற்ற சர்வதேச அமைப்புகளினால் உலகின் சிறந்த குறைந்த கட்டண விமானச் சேவை நிறுவனம் எனவும் Vietjet பலமுறை பெயரிடப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு பார்க்கவும் www.vietjetair.com
