Header Logo
SLIC
பல்சுவை
வயநாடு நிலச்சரிவில் உயிர் தப்பிய தம்பதி!

Jul 8, 2026 - 04:48 PM

வயநாடு நிலச்சரிவில் உயிர் தப்பிய தம்பதி!
Mobitel Inner 1278
EDEX Inner

கேரள மாநிலம் வயநாடு கல்லடியில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது, அங்கு நின்ற டேங்கர் லொறி ஒன்றும் அடித்து வரப்பட்டது. அந்த லொறிக்கு அடியில் சிக்கிய இருவர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. 

மதுரையை பூர்வீகமாக கொண்ட பால்ராஜ் - கூடம்மாள் தம்பதியினர் தோட்ட தொழிலாளர்களாக வயநாடு மாவட்டம் மேம்பாடியில் வேலை பார்த்து வருகின்றனர். நிலச்சரிவின்போது நடந்தது குறித்து அந்தத் தம்பதியினர் தெரிவிக்கையில், 

நாங்கள் வங்கிக்கு செல்வதற்காக சுரங்கப்பாதைக்கு முன்னால் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தோம். 

அப்போது கனமழை பெய்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில், திடீரென பயங்கர சத்தத்துடன் நிலச்சரிவு ஏற்பட்டது. நாங்கள் திரும்பிப் பார்த்தபோது முழு மலையுமே சரிந்து வந்ததுபோல் இருந்தது. 

உயிர் தப்பிக்க நாங்கள் எதிர் திசையில் ஓடினோம். எங்களுக்கு பின்னால் டேங்கர் லொறி குலுங்கியபடி, எங்களை துரத்தி வருவதுபோல் இருந்தது. அதில் இருந்து தப்பிக்க ஓடும்போது தவறி விழுந்துவிட்டோம். 

இருப்பினும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம். சாவின் விளிம்பு வரை சென்று மீண்டும் உயிர் பெற்றிருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

MOST READ

காணொளி
மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

Mobitel 1278