Header Logo
Mogo Academy

செய்திகள்
பல்வேறு இடங்களில் நிகழ்ந்த கோர விபத்துக்கள் - நால்வர் உயிரிழப்பு

Jul 10, 2026 - 07:44 AM -

0

பல்வேறு இடங்களில் நிகழ்ந்த கோர விபத்துக்கள் - நால்வர் உயிரிழப்பு
Mobitel inner

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த நான்கு வெவ்வேறு வீதி விபத்துக்களில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

பதவிய, அனுராதபுரம், பொத்துவில் மற்றும் வெலிகம ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று (09) இந்த விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன.

 

போகஸ்ஹந்திய - புல்மோட்டை வீதியின் 2ஆம் கட்டை தூணிற்கு அருகில் விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. போகஸ்ஹந்திய நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

 

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், அவரது மனைவி மற்றும் அவர்களுடன் பயணித்த இரு பிள்ளைகளும் பதவிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கல்லடி பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் ஆவார்.

 

இதேவேளை, அனுராதபுரம் - ரம்பேவ வீதியின் கல்வல சந்திக்கு அருகில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

 

அனுராதபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வலதுபுறமாக திரும்ப முயன்ற போது, எதிரே வந்த காருடன் மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

 

விபத்தினால் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், பின்னால் பயணித்தவர் மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோர் காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சாலியபுர பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் ஆவார்.

 

இதேவேளை, பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்துவில் - அக்கரைப்பற்று வீதியின் ஊரணி சந்திக்கு அருகில், வேன் ஒன்றும்  மூன்று சக்கர வண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் வேன் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

 

அக்கரைப்பற்று நோக்கி பயணித்த வேன், எதிரே வந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இரண்டு வாகனங்களும் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின. 

 

இதில் காயமடைந்த வேன் ஓட்டுநர் கல்முனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் காரைதீவு பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் ஆவார்.

 

மற்றொரு விபத்து வெலிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சத்யா ஹெட்டிகே மாவத்தையில் நிகழ்ந்துள்ளது. பழைய காலி வீதியிலிருந்து பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து சுவருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

 

விபத்தில் காயமடைந்த ஓட்டுநரும் பின்னால் பயணித்த மற்றொரு நபரும் வலன வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், பின்னால் பயணித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதே உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 

முச்சக்கரவண்டி ஓட்டுநர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் வெலிகம பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் ஆவார்.


MOST READ

காணொளி
உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

இது மிகவும் மோசமான செயல்!

இது மிகவும் மோசமான செயல்!

Mobitel Upahara