Jul 10, 2026 - 10:53 AM -
0
சியெட் களனி ஹோல்டிங்ஸ் (CEAT Kelani Holdings) ஆனது இலங்கையில் உள்ள பல்வேறு வீதிகளின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, வாகனத்தை சிறந்த முறையில் கட்டுப்படுத்தவும், சௌகரியமாகவும், நீண்ட காலம் உழைக்கவும் கூடிய இரண்டு புதிய SUV டயர்களை அறிமுகப்படுத்தி, தனது டயர் தயாரிப்பு வகைகளை விரிவுபடுத்தியுள்ளது.
இந்த அறிமுகத்தின் மூலம், 215/65 R16 அளவிலான SecuraDrive SUV டயரும், 245/70 R16 அளவிலான CrossDrive AT டயரும் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் இலங்கையில் சியெட் நிறுவனத்தின் மொத்த ரேடியல் டயர் வரிசை 82 வகைகளாக விரிவடைந்துள்ளது. ஜேர்மனியின் ஃபிராங்க்பர்டில் அமைந்துள்ள சியெட் நிறுவனத்தின் ஆய்வு மற்றும் அபிவிருத்தி (R&D) நிலையத்தில் வடிவமைக்கப்பட்டு சோதிக்கப்பட்ட இந்த டயர்கள், உலகத் தரத்திலான பொறியியல் தொழில்நுட்பத்தை இலங்கை வீதிகளுக்கு கொண்டு வருகின்றன. மேம்பட்ட ரப்பர் கலவை தொழில்நுட்பம் மற்றும் நவீன மிதிப்பகுதி வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இவை, அன்றாட ஓட்டுதலுக்கு சிறந்த செயல்திறன், பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை வழங்குகின்றன.
SecuraDrive SUV டயர், Toyota Rush, Suzuki Vitara, Nissan Qashqai, Nissan Juke, Nissan X-Trail, Kia Sportage போன்ற நவீன நகர்ப்புற மற்றும் நெடுஞ்சாலைப் பயன்பாட்டிற்கான SUV வாகனங்களுக்கும், Toyota Hilux போன்ற பயன்பாட்டு வாகனங்களுக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிக வேகத்தில் நிலையான கட்டுப்பாடு, துல்லியமான கையாளும் திறன், மற்றும் ஈரமான மற்றும் உலர்ந்த வீதிப் பரப்புகளிலும் தொடர்ந்து சிறந்த பிடிப்புத்தன்மையை வழங்கும் வகையில் இது பொறியியல் ரீதியாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், கடினமான மற்றும் பல்வேறு நிலப்பரப்புகளில் பயணிக்கும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், CrossDrive AT டயர் அனைத்துவகை நிலப்பரப்புகளுக்கும் ஏற்ற தீர்வாக உருவாக்கப்பட்டுள்ளது. Mitsubishi Triton, Mitsubishi L200, Isuzu D-Max, Mitsubishi Montero மற்றும் Kia Sorento போன்ற வாகனங்களுக்குப் பொருத்தமான இந்த டயர், சாகசப் பயணங்களை விரும்பும் ஓட்டுநர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. வீதிக்கு வெளியேயான திறனையும், வீதியில் பயணிக்கும் போது கிடைக்கும் மென்மையான மற்றும் நுட்பமான ஓட்ட அனுபவத்தையும் ஒருங்கிணைத்து வழங்குவது இதன் முக்கிய சிறப்பம்சமாகும்.
புதிய இந்த இரு டயர்களும், ஆய்வு மற்றும் சோதனைத் துறைகளில் சியெட் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முதலீட்டின் பயனைப் பெற்றுள்ளன. ரப்பர் கலவை, டயர் மிதியடி செயல்திறன் மற்றும் ஒட்டுமொத்த நீடித்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், ஈரமான, உலர்ந்த மற்றும் கடுமையான வீதிச் சூழல்களில் இவை விரிவான மற்றும் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பக்கச்சுவர்கள் மற்றும் மிதியடி வடிவமைப்பு, அதிர்வுகள் மற்றும் அதிர்ச்சிகளை திறம்பட உறிஞ்சி, இலங்கையின் வீதி நிலைகளில் சிறந்த கட்டுப்பாட்டையும் அதிக வசதியான பயண அனுபவத்தையும் வழங்குகின்றன.
புதிய SecuraDrive SUV மற்றும் CrossDrive AT டயர்களுக்கு முழுமையான நான்கு ஆண்டுகள் உத்தரவாதம் வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் பரவியுள்ள 550-க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர் வலையமைப்பின் ஆதரவுடன், இந்த புதிய டயர்கள் தற்போது சியெட் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்களில் அறிமுகச் சலுகை விலையில் கிடைக்கின்றன.
இலங்கையின் முதலிடம் வகிக்கும் டயர் வர்த்தகநாமமான சியெட் ஆனது, ஆண்டுதோறும் 1.2 மில்லியனுக்கும் அதிகமான டயர்களை விற்பனை செய்து, இலட்சக்கணக்கான வாகன ஓட்டிகளின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. Brand Finance நிறுவனத்தால் இலங்கையின் மிக மதிப்புமிக்க டயர் வர்த்தக நாமமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளதுடன், LMD சஞ்சிகையினால் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் இலங்கையின் மிகவும் விரும்பப்படும் டயர் வர்த்தகநாமம் எனவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
சியெட் நிறுவனத்தின் சந்தை முன்னணி நிலைக்கு உயர்ந்திருப்பதற்கு தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் உற்பத்தித் திறன் அபிவிருத்தியில் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான முதலீடுகளே முக்கிய காரணமாகும். அதன் உற்பத்தி நடவடிக்கைகள் பயணிகள் கார்கள், வேன்கள், எஸ்யூவிகள் (SUVs), வர்த்தக வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் விவசாய வாகனங்களுக்கான டயர்களை உள்ளடக்கியதாக உள்ளன.
