Header Logo
Mogo Academy

செய்திகள்
திங்கட்கிழமை முதல் நெல் கொள்முதல் ஆரம்பம்

Jul 10, 2026 - 11:32 AM -

0

திங்கட்கிழமை முதல் நெல் கொள்முதல் ஆரம்பம்
Mobitel inner

எதிர்வரும் திங்கட்கிழமை (13) முதல் நெல் சந்தைப்படுத்தல் சபையூடாக நெல் கொள்வனவு நடவடிக்கைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார்.

 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், தற்போதைய நாட்களில் அதிகளவில் நெல் அறுவடை செய்யப்படும் பிரதேசங்களை மையப்படுத்தி, நெல் களஞ்சியசாலைகளைத் திறந்து இந்த நெல் கொள்முதல் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.

 

அதற்கமைய, தற்போது வடக்கு, கிழக்கு மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளில் நெல் அறுவடை பெருமளவில் ஆரம்பமாகியுள்ளதால், அந்தப் பிரதேசங்களை மையமாகக் கொண்டு நெல் கொள்வனவு முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

நெல் சந்தைப்படுத்தல் சபை ஒரு கிலோ நாடு நெல்லை 120 ரூபாவிற்கும், ஒரு கிலோ சம்பா நெல்லை 130 ரூபாவிற்கும், ஒரு கிலோ கீரி சம்பா நெல்லை 140 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யவுள்ளதுடன், நெல் கொள்முதலுக்காக தற்போது களஞ்சியசாலைகள் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 

இதன்படி, 143 இடங்களில் உள்ள களஞ்சியசாலைகளில் நெல் கொள்வனவு செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், ஒருவேளை இந்தக் களஞ்சியசாலைகள் முழுமையாக நிரம்பினால், அருகில் உள்ள தனியார் துறை களஞ்சியசாலைகளைப் பெற்றுக்கொள்வது குறித்தும் தற்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தலைவர் சுட்டிக்காட்டினார்.

 

அத்துடன், அரசாங்கத்தினால் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு 6,000 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்கு மேலதிகமாக அடமானக் கடன் திட்டத்தின் கீழ் 10,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்களுக்கு நெல் இருப்புகளைச் சேகரிப்பதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் விவசாய நல்வாழ்வு மேம்பாட்டுத் திணைக்களம் கண்காணிக்கும் என்றும் தெரிவித்தார்.

 

மேலும், நெல் கொள்வனவு மற்றும் கடன் திட்டம் குறித்துத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த,

 

"இம்முறை தகுதியுடைய கூட்டுறவுச் சங்கங்களுக்கும் இந்தக் கடனை வழங்குவதற்குத் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு நாம் உண்மையில் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பது அரசாங்கத்தின் பாதுகாப்பு இருப்புக்கான நெல்லாகும். நெல் சந்தைப்படுத்தல் சபை எப்போதும் தரப்படுத்தப்பட்ட நெல்லையே கொள்வனவு செய்யும். ஏனெனில், இதனை ஒரு பாதுகாப்பு இருப்பாக நாம் குறிப்பிட்ட காலம் வரை வைத்திருக்க வேண்டிய தேவையுள்ளது. எனவே, ஈரப்பதன் 14% ஆகவும், உமி அல்லது பதர் சதவீதம் 9% ஐ விடக் குறைவாகவும் இருக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளோம். நாம் அதனை அளவிட்டே கொள்வனவு செய்வோம். அத்துடன் முக்கியமாக, இந்தச் போகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை மட்டுமே நாம் கொள்வனவு செய்வோம்" எனக் குறிப்பிட்டார்.


MOST READ

காணொளி
உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

இது மிகவும் மோசமான செயல்!

இது மிகவும் மோசமான செயல்!

Mobitel Upahara