Header Logo
SLIC
வணிகம்
அமானா தகாஃபுல் பிஎல்சி உரிமைப் பங்கு வெளியீட்டை வெற்றிகரமாக நிறைவு செய்து, பங்குதாரர்களின் வலுவான வரவேற்பின் மத்தியில் ரூ. 1 பில்லியனுக்கும் அதிகமான ந

Jul 10, 2026 - 11:46 AM

அமானா தகாஃபுல் பிஎல்சி உரிமைப் பங்கு வெளியீட்டை வெற்றிகரமாக நிறைவு செய்து, பங்குதாரர்களின் வலுவான வரவேற்பின் மத்தியில் ரூ. 1 பில்லியனுக்கும் அதிகமான ந
Mobitel Inner 1278
EDEX Inner

அமானா தகாஃபுல் பிஎல்சி (Amana Takaful PLC) தனது உரிமைப் பங்கு வெளியீட்டை வெற்றிகரமாக பூர்த்தி செய்து, ரூ. 1 பில்லியனுக்கும் அதிகமான நிதியை திரட்டியுள்ளது. ஏற்கனவே உள்ள பங்குதாரர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட இந்தச் சலுகை மூலம், தலா ரூ. 19 வீதம் 52.8 மில்லியனுக்கும் அதிகமான புதிய பங்குகள் ஒதுக்கப்பட்டன. எதிர்பார்த்ததை விட 68.8% அதிக விண்ணப்பங்கள் வந்ததன் மூலம், முதலீட்டாளர்கள் நிறுவனத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளனர். 

இந்த உயர்நிலையானது, மேம்படுத்தப்பட்ட மொபைல் செயலி மற்றும் எளிதாக்கப்பட்ட கோரிக்கை செயலாக்கம் போன்ற டிஜிட்டல் முன்முயற்சிகளில் முதலீடு செய்துள்ள அமானா தகாபுல் நிறுவனத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியையும், அதன் வாகன , மருத்துவ மற்றும் பரந்த பொதுக்காப்புறுதி சேவைகளின் விரிவாக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டது. மேலும் இந்நிறுவனம், இலங்கையின் அதிக விருதுகளைப் பெற்ற நிறுவனங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது உட்பட, பல தொழில்சார் பாராட்டுகளையும் இந்த காலகட்டத்தில் பெற்றுள்ளது அமானா தகாஃபுல் பொதுக்காப்புறுதி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சிவகார்த்திகன் இது தொடர்பாக தெரிவிக்கையில், இந்த உரிமைப் பங்கு வெளியீட்டிற்கு கிடைத்த வலுவான வரவேற்பு, நிறுவனத்தின் நீண்டகால மூலோபாயம் மற்றும் டிஜிட்டல் மாற்ற முயற்சிகள் மீது பங்குதாரர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. மேலும், திரட்டப்பட்டுள்ள மேலதிக மூலதனம், நிறுவனம் தனது அடுத்த கட்ட வளர்ச்சிப் பயணத்தை நோக்கி நகரும் நிலையில், அதன் நிதி வலிமையையும் நிலைத்தன்மையையும் மேலும் வலுப்படுத்தும் என குறிப்பிட்டார். 

தற்போதைய பங்குதாரர்களுக்கு, அவர்கள் வைத்திருந்த ஒவ்வொரு பதினான்கு (14) பங்குகளுக்கும் மூன்று (3) புதிய பங்குகள் வழங்கப்பட்டன. இந்த உரிமைப் பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்பட்ட நிதி, நிறுவனத்தின் தொடர்ச்சியான வளர்ச்சி முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும், எதிர்வரும் SLFRS 17 மற்றும் SLFRS 9 கணக்கியல் தரநிலைகள் அமல்படுத்தப்படுவதற்கான தயாரிப்புகளுக்கும் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும், இந்த மூலதன திரட்டல் அமானா தகாஃபுல் நிறுவனத்தின்அடுக்கு 1 மூலதனத்தை வலுப்படுத்துவதன் மூலம், அதன் பொது காப்புறுதி வர்த்தகத்தின் எதிர்கால விரிவாக்கத் திட்டங்களுக்கு அதிக நிதி நெகிழ்வுத்தன்மையையும் வலுவான அடித்தளத்தையும் வழங்குகிறது. இந்த உரிமைப் பங்கு வெளியீட்டிற்கான ஆலோசனை தரகராக Asia Securities Advisors (Pvt) Ltd நிறுவனம் செயல்பட்டது.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278