Header Logo
Mogo Academy

வணிகம்
SLT-MOBITEL mCash இனால் போக்குவரத்து அபராதங்கள் மற்றும் அரசாங்க கொடுப்பனவுகள் மேற்கொள்வதற்காக GovPay செயற்படுத்தப்பட்டுள்ளது

Jul 10, 2026 - 11:55 AM -

0

SLT-MOBITEL mCash இனால் போக்குவரத்து அபராதங்கள் மற்றும் அரசாங்க கொடுப்பனவுகள் மேற்கொள்வதற்காக GovPay செயற்படுத்தப்பட்டுள்ளது
Mobitel inner

இலங்கையின் முன்னணி மொபைல் பணச் சேவையான SLT‑MOBITEL mCash, அரசாங்க டிஜிட்டல் கொடுப்பனவு கட்டமைப்பான GovPay ஐ தனது சேவை அமைப்பில் உள்வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. 

mCash உடன் GovPay ஐ ஒருங்கிணைப்பினூடாக, போக்குவரத்து அபராதங்கள் முதல் உள்ளூராட்சி மன்ற வரிகள் வரை 4,000 க்கும் மேற்பட்ட பொதுச் சேவைகளுக்காக அரசாங்க நிறுவனங்களுக்கு உடனுக்குடன் கொடுப்பனவுகளைச் செலுத்தும் GovPay இன் ஆற்றலையும், mCash இன் பரந்த ரீதியிலான அணுகலையும் ஒன்றிணைக்கும் ஒரு தேசிய முயற்சியாகும். இதன் ஊடாக, இலங்கை தனது டிஜிட்டல் பொருளாதார நிகழ்ச்சி நிரலை விரைவுபடுத்துவதுடன், நிதிசார் உள்ளடக்கத்தை வலுப்படுத்தி, பொதுச் சேவை விநியோகத்தை நவீனமயமாக்குகின்றது. 

இம்முயற்சியானது குடிமக்கள், அரசாங்கம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் ஒரு பாலமாக அமைவதுடன், அன்றாடக் கொடுப்பனவுகளைத் தேசிய உற்பத்தித்திறன், உள்ளடக்கம் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றின் உந்துசக்தியாக மாற்றுகின்றது. 

மொபிடெல் வாடிக்கையாளர்கள் #111# ஐ டயல் செய்வதன் மூலம் தங்களை mCash சேவையில் மிக இலகுவாகப் பதிவுசெய்துகொள்ள முடியும் என்பதுடன், Android, iOS அல்லது Huawei AppGallery ஊடாக mCash App பதிவிறக்கம் செய்து, GovPay மூலமாக பாதுகாப்பான டிஜிட்டல் அரசாங்கக் கொடுப்பனவுகளை உடனடியாகச் செலுத்தத் தொடங்கலாம். இதற்கு மேலதிகமாக, எந்தவொரு வாடிக்கையாளரும் தமக்கு அருகிலுள்ள மொபிடெல் ரீலோட் விற்பனை நிலையத்திற்கு நேரடியாகச் சென்று, சேவைப் பகுதியின் ஊடாக GovPay கொடுப்பனவுகளை மிகவும் வசதியான முறையில் செலுத்திக் கொள்ளவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, ICTA (GovTech என மறுபெயரிடப்பட்டுள்ளது) மற்றும் LankaPay ஆகியவற்றின் கூட்டு முயற்சியான GovPay, 280 க்கும் மேற்பட்ட அரசாங்க நிறுவனங்களுக்குரிய 4,090 க்கும் அதிகமான பொதுச் சேவைகளுக்கான கொடுப்பனவுகளை இலகுபடுத்துகின்றது. மக்கள் இப்போது பொதுப் பயன்பாட்டுக் கட்டணங்கள், கல்விக் கட்டணங்கள், சுகாதாரச் சேவைக்கான கட்டணங்கள் மற்றும் பரந்த அளவிலான அரசாங்கக் கொடுப்பனவுகள் போன்றவற்றை mCash ஊடாக தடையின்றிச் செலுத்த முடியும். குறிப்பாக, இத்தளத்தின் மூலமாக எந்நேரத்திலும், எவ்விடத்திலிருந்தும் நேரடியாக mCash செயலி ஊடாக உடனுக்குடன் போக்குவரத்து அபராதங்களை GovPay வழியே செலுத்துவதற்கான வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

எந்நேரமும் கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்கான வசதி மூலம் மக்கள் பேரளவிலான எளிமையையும் தடையற்ற அணுகல்தன்மையையும் பெறுகின்றனர். அதுமாத்திரமன்றி, அரசாங்கத்தின் வருவாய் சேகரிப்புச் செயல்முறை மேலும் அதிவேகமானதாகவும், அதிக வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் மற்றும் வினைத்திறன் மிக்கதாகவும் மாறுகின்றது. வணிகங்கள், அதிலும் குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள், இலகுவான விதிமுறை இணக்கம் மற்றும் குறைக்கப்பட்ட பரிவர்த்தனைச் செலவுகள் ஆகியவற்றின் மூலம் பெரிதும் பலனடைகின்றன. 

நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை பங்குதாரர்களுக்கு, இந்த ஒருங்கிணைப்பானது முதிர்ச்சியடைந்து வரும் ஒரு கொடுப்பனவு கட்டமைப்பை வெளிப்படுத்துகின்றது. அத்துடன், இது அரசாங்கம் சார்ந்த பரிவர்த்தனைகளில் உள்ள தடைகளைக் குறைப்பதுடன், பல்வேறு துறைகளிலும் அதிக வினைத்திறன் மற்றும் விதிமுறை இணக்கத்திற்கு வலுவூட்டுகின்றது. 2013 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட mCash, 2026 ஆம் ஆண்டில் தனது 13 ஆவது ஆண்டில் தடம் பதிப்பதுடன், இலங்கையின் முன்னணி மொபைல் பணப் பரிமாற்றுத் தளமாக வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த தசாப்த காலத்தில், mCash தளமானது B2C மற்றும் B2B ஆகிய இரு பிரிவுகளுக்கும் ஒருசேரச் சேவையாற்றும் ஒரு நம்பகமான சுற்றுச்சூழல் அமைப்பாக உருவெடுத்துள்ளது. 

நுகர்வோருக்கு, mCash இனால் peer-to-peer பணப் பரிமாற்றங்கள், LANKAQR கொடுப்பனவுகள், பணப் மீளப்பெறுகைகள், பொதுப் பயன்பாட்டு மற்றும் தொலைத்தொடர்புக் கட்டணத் தீர்ப்புகள், காப்புறுதி மற்றும் நிதிசார் கொடுப்பனவுகள், நன்கொடைகள், சுகாதார மற்றும் கல்விக் கட்டணக் கொடுப்பனவுகள், உள்வரும் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றங்கள் மற்றும் திட்டமிடப்பட்ட கொடுப்பனவுகள் உள்ளடங்கலாக ஒரு விரிவான சேவைத் தொகுப்பு வழங்கப்படுகின்றது. மறுபுறம், நிறுவனப் பிரிவில், நிதி சேகரிப்பு முகாமைத்துவம், கட்டணப் பட்டியல் திரட்டல், கொடுப்பனவு நுழைவாயில் தீர்வுகள், LANKAQR கட்டண ஏற்பு, முகவர் வங்கிச் சேவைகள் மற்றும் கூட்டு-முத்திரையிடப்பட்ட நிதி தயாரிப்புகள் ஆகியவற்றிற்கு mCash வலுவூட்டுகின்றது. இதன் மூலம் நாட்டின் கொடுப்பனவு கட்டமைப்பின் ஒரு முக்கிய உந்துசக்தியாக இது திகழ்கின்றது. 

2023 ஆம் ஆண்டின் Asian Fintech Academy Awards 2023 இல் டிஜிட்டல் கொடுப்பனவுகள் மற்றும் நிதி சேகரிப்புகளுக்கான சிறந்த புத்தாக்கம் விருதை வென்றமை, Brand Finance & LMD நிறுவனங்களினால் இலங்கையின் 3 ஆவது மிகவும் விரும்பப்படும் Fintech வர்த்தக நாமமாகவும் (2022), நிதிப் பரிவர்த்தனைகளுக்கான 3 ஆவது மிகவும் விரும்பப்படும் வர்த்தக நாமமாகவும் (2023) தரப்படுத்தப்பட்டமை, லங்காபே டெக்னோவேஷன் விருதுகள் 2019 இல் வெள்ளி விருதைப் பெற்றமை மற்றும் SLIM வர்த்தக நாமச் சிறப்புகள் 2019 இல் ஆண்டின் சிறந்த ஒன்லைன் வர்த்தக நாமம் பிரிவில் தங்க விருதைச் சூடியமை எனப் பல உயரிய விருதுகளையும் அங்கீகாரங்களையும் mCash பெற்றுள்ளது. இதன் மூலம், இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் முதன்மை பெற்ற டிஜிட்டல் கொடுப்பனவுத் தளங்களில் ஒன்றாக இது தொடர்ந்து தன் நிலையை நிலைநிறுத்தி வருகின்றது. 

GovPay பற்றிய மேலதிக தகவல்களுக்கு பார்வையிட, : https://govpay.lk/en/


MOST READ

காணொளி
உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

இது மிகவும் மோசமான செயல்!

இது மிகவும் மோசமான செயல்!

Mobitel Upahara