Header Logo
SLIC
வணிகம்
இளம் சிந்தனையாளர்களுக்கு உத்வேகமளித்துள்ள SLIIT கற்கை நிறுவனத்தின் SciFest 2026 நிகழ்வு

Jul 10, 2026 - 12:00 PM

இளம் சிந்தனையாளர்களுக்கு உத்வேகமளித்துள்ள SLIIT கற்கை நிறுவனத்தின் SciFest 2026 நிகழ்வு
Mobitel Inner 1278
EDEX Inner

SLIIT கற்கை நிறுவனத்தின் மானிடவியல் மற்றும் விஞ்ஞான பீடத்தின் (Faculty of Humanities and Sciences) கீழ் இயங்கும் பிரயோக விஞ்ஞானவியல் துறை (Department of Applied Sciences), 2026 ஜூன் 5 அன்று SLIIT மாலபே வளாகத்தில் SciFest 2026 என்ற நிகழ்வை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. யதார்த்த உலகப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் காண்பதில் முக்கிய பங்காற்றும் விஞ்ஞானம், புத்தாக்கம் மற்றும் தொழில்முயற்சியாண்மை ஆகிய துறைகளை ஆராயுமாறு பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த வருடாந்த அறிவியல் பெரு நிகழ்வு வடிவமைக்கப்பட்டிருந்தது. 

SciFest நிகழ்வின் நான்காவது பதிப்பில் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக பட்டப்படிப்பு மாணவர்கள், கல்விமான்கள், துறைசார் நிபுணர்கள் மற்றும் கூட்டாளர்கள் என சுமார் 300 பேர் பங்கேற்றனர். கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, விஞ்ஞானக் கல்வியை மேம்படுத்துதல், புத்தாக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் கல்வித்துறைக்கும் தொழில் துறைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் SLIIT காண்பிக்கும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியது. மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பக் கற்கை மையத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி ருச்சிர விஜேசேன அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகவும் சிறப்பு பேச்சாளராகவும் கலந்துகொண்டு சிறப்பித்தார். பல்கலைக்கழகத்தின் வேந்தரும் தலைவருமான பேராசிரியர் லக்ஷ்மன் ரத்நாயக்க; சிரேஷ்ட பிரதி துணைவேந்தரும் முதல்வருமான பேராசிரியர் நிமல் ராஜபக்ஷ; மானிடவியல் மற்றும் விஞ்ஞான பீடத்தின் உதவி துணைவேந்தர் கலாநிதி மலித விஜேசுந்தர; பொறியியல் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் அயந்த கோமஸ்; கல்வி மேம்பாடு மற்றும் தர உத்தரவாதப் பிரிவின் பீடாதிபதி பேராசிரியர் கொலின் என். பீரிஸ்; மற்றும் பிரயோக விஞ்ஞானத் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ஸ்ரீயானி என். பீரிஸ் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்களில் அடங்கியிருந்தனர். 

நடுவப்பணியின் மதிப்பீட்டுக் குழுவில், Lassana Group இன் தலைவர் வைத்தியர் லசந்த மாளவிகே, SLIIT Innovate இன் பணிப்பாளர் கலாநிதி டிலான் பெர்னாண்டோ, Hatch Works (Pvt) Ltd நிறுவனத்தின் Programs துறைத் தலைமை அதிகாரி திரு. நிரேஷ் ரத்தினகோபால், Dilmah Conservation & Sustainability இன் முகாமையாளர் திரு. றிஷான் சம்பத் ஆகிய தொழில்துறை மற்றும் கல்வித்துறை சார்ந்த மதிப்பிற்குரிய நிபுணர்களும், SLIIT ஐப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பேராசிரியர் எரங்க விஜேசிங்க மற்றும் பேராசிரியர் நத்தாலி சில்வா ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். 

விஞ்ஞான வினாவிடைப் போட்டியானது, உயிரியல், இரசாயனவியல் மற்றும் பௌதிகவியல் ஆகிய பாடங்களில் மாணவர்களின் அறிவைச் சோதித்தது. ஐந்து மாகாணங்களைச் சேர்ந்த 30 பாடசாலைகளில் இருந்து, நான்கு இறுதிப் போட்டியாளர்கள் SLIIT இல் போட்டியிட்டனர். குருணாகல் விஷ்வோத கல்லூரி வெற்றியாளர்களாக வலம்வந்தது. அதே நேரத்தில் கேகாலை புனித மரியாள் கல்லூரி மற்றும் மாலபே ஆண்கள் மாதிரிப் பாடசாலை ஆகியவை முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்தன. 

IGNITE புத்தாக்கப் போட்டியானது, பாடசாலை மற்றும் பல்கலைக்கழகப் பிரிவுகளிலிருந்து சுமார் 80 போட்டியாளர்களை ஒன்றிணைத்து, வணிகரீதியாக சாத்தியமான விஞ்ஞானத் தீர்வுகளை முன்வைக்க அவர்களை ஊக்குவித்தது. பல்கலைக்கழகப் பிரிவில், தினேத் ஷவிந்த சமரக்கோன் தலைமையிலான SLIIT ஐச் சேர்ந்த SilenceSpeak அணி, சைகை மொழி மொழிபெயர்ப்பு கையுறைக்காக முதல் இடத்தைப் பெற்றது. பாடசாலைப் பிரிவில், மேல் மாகாணம்/கம்பஹா/யசோதரா தேவி மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த எச்.பீ. துல்ஜா சனுலி கருணசேகர, டெங்கு நுளம்பின் குடம்பிகளைக் கண்டறிவது குறித்த ஒரு செயற்திட்டத்துடன் முதல் இடத்தைப் பெற்றார். 

இந்த முயற்சி குறித்து கருத்து தெரிவித்த மானுடவியல் மற்றும் விஞ்ஞான பீடத்தின் உப துணைவேந்தர் கலாநிதி மலித விஜேசுந்தர, “இளம் சிந்தனையாளர்கள் விஞ்ஞானத்தை வகுப்பறைக்கு அப்பால் சிந்திப்பதற்கு உதவுவதற்காகவே SciFest 2026 உருவாக்கப்பட்டது. அறிவு, படைப்பாற்றல் மற்றும் தொழில்முயற்சியாண்மை ஆகியவற்றை ஒன்றிணைப்பதன் மூலம், மாணவர்கள் விமர்சன ரீதியாக சிந்திக்கவும், நடைமுறைத் தீர்வுகளை உருவாக்கவும், புத்தாக்கம் எவ்வாறு சமூகத்திற்கும் பொருளாதாரத்திற்கும் பங்களிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவும் நாங்கள் ஊக்குவிக்கிறோம்.” 

SciFest 2026 நிகழ்விற்கு ALTHIA மற்றும் AVON Pharmo Chem ஆகிய நிறுவனங்கள் முதன்மை அனுசரணையாளர்களாகவும் U & P Global Tec முதன்மைப் பங்காளராகவும் ஆதரவளித்துள்ளன. LifeCare Biotech, CeyDev, P&T, மற்றும் Hemsons ஆகிய நிறுவனங்களும் கூடுதல் ஆதரவை வழங்கியுள்ளன. 

வெற்றியாளர்களுக்கு அவர்களின் சிறப்பான சாதனைகளைப் பாராட்டும் வகையில் பதக்கங்கள், விருதுகள் மற்றும் சான்றிதழ்களுடன், மொத்தம் ரூபா 100,000 பணப்பரிசும் வழங்கப்பட்டது. விஞ்ஞானத்தின் மீதான ஈடுபாட்டை அதிகரித்தல், புத்தாக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் இலங்கையின் அடுத்த தலைமுறை விஞ்ஞானிகள் மற்றும் தொழில்முயற்சியாளர்களை வளர்த்தல் ஆகிய நோக்கங்களுடன், SciFest நிகழ்வை எதிர்காலப் பதிப்புகளில் இதனை மேலும் விரிவுபடுத்த SLIIT திட்டமிட்டுள்ளது.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278