Header Logo
SLIC
வணிகம்
எதிர்காலத் தலைமுறையின் ஆற்றலை எடுத்துக்காட்டியுள்ள SLIIT Business School ன் SoftSkills+ 2026 நிகழ்வு

Jul 10, 2026 - 12:24 PM

எதிர்காலத் தலைமுறையின் ஆற்றலை எடுத்துக்காட்டியுள்ள SLIIT Business School ன் SoftSkills+ 2026 நிகழ்வு
Mobitel Inner 1278
EDEX Inner

SLIIT Business School கற்கைமையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட SoftSkills+ 2026 போட்டியின் இறுதிச் சுற்றுக்கு, மொத்தம் 112 அணிகளிலிருந்து 48 அணிகள் தகுதி பெற்றன. மே 16 அன்று, இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் வருகை தந்த 192 மாணவர்கள் தங்கள் தலைமைத்துவம், தகவல் தொடர்பாடல், படைப்பாற்றல் மற்றும் ஒன்றுபட்டு உழைக்கும் திறன்களை வெளிப்படுத்தியதால், SLIIT வளாகமே மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டது. மதிப்புமிக்க இப்போட்டியில் முதலிடத்தைத் தமதாக்கிக் கொள்வதற்குப் போட்டியிட்ட மாணவர்கள், எதிர்காலத் தலைமுறைத் தலைவர்களின் திறமைகளைக் கொண்டாடுவதற்கும் ஊக்குவிப்பதற்கும் SoftSkills+ ஒரு சிறந்த மேடையாகப் பயன்படுத்திக்கொண்டனர். 

இளம் தலைமுறையினரிடையே மென் திறன்களை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை இந்நிகழ்வு பிரதிபலித்ததுடன், எதிர்காலத்திற்கு சிறப்பாக முகங்கொடுப்பதற்குத் தயாரான தலைவர்களை உருவாக்குவதில் SLIIT Business School கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியது. SoftSkills+ 2026 போட்டியில் கொழும்பு மெதடிஸ்ட் கல்லூரி வெற்றியாளராக வலம்வந்தது. இரத்தினபுரி சிவலி மத்திய கல்லூரி இரண்டாம் இடத்தையும், பதுளை மத்திய கல்லூரி மூன்றாம் இடத்தையும் பிடித்தன. 

இந்நிகழ்வில் ACCA Sri Lanka நிறுவனத்தின் தலைவர் திரு. சமிந்த குமாரசிறி அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். கூடியிருந்தோர் மத்தியில் உரையாற்றிய அவர், வேகமாக மாறிவரும் இன்றைய தொழில் உலகில் தகவல் தொடர்பாடல், தலைமைத்துவம், சூழலுக்கு ஏற்பத் தகவமைத்துக்கொள்ளும் திறன் மற்றும் தனிப்பட்ட உறவுத் திறன்கள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். 

புகழ்பெற்ற கலைஞர் மதானி மல்வத்தகே மற்றும் களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. தரிந்து வீரசிங்க ஆகியோர் பங்கேற்பாளர்களுக்காக ஈடுபாடுகளை வளர்க்கும் மென்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கை நடத்தினர். அவர்களின் ஆழ்ந்த சிந்தனைமிக்க அமர்வுகள், இன்றைய தொழில்முறைச் சூழல்களில் இன்றியமையாத திறன்களை மேம்படுத்திக்கொள்ள மாணவர்களைத் தூண்டின. 

SoftSkills+ 2026 நிகழ்விற்கு பல முன்னணி நிறுவனங்கள் மற்றும் வர்த்தகநாமங்கள் பெருமையுடன் அனுசரணையளித்தன. அவை இந்நிகழ்வை குறிப்பிடத்தக்க வகையில் வெற்றியாக மாற்றுவதற்குப் பங்களித்தன. British Council, SLIIT International, CIMA Sri Lanka, Inspire Business School, மைலோ (நெஸ்லே), சிங்கர், Fusion Gear, கொமர்ஷல் வங்கி மற்றும் Hemas Consumer Brands ஆகியவற்றுக்கு இந்நிகழ்வில் ஏற்பாட்டாளர்கள் தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். 

பாடசாலைகளின் சிறப்பான செயல்பாடுகளை அங்கீகரித்து, இப்போட்டியானது மிகுந்த போட்டி நிறைந்த அதே சமயம் மிகவும் கொண்டாட்டமான முறையில் நிறைவடைந்தது. SoftSkills+2026 நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரும், SLIIT Business School கற்கைமையத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான திரு. ரணித வீரரத்ன, அவர்கள் கருத்து தெரிவிக்கையில் “இந்த ஆண்டு நிகழ்வின் குறிப்பிடத்தக்க வெற்றியும் நேர்மறையான விளைவும், எதிர்கால நிகழ்வுகளுக்கும் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு வலுவான அத்திவாரத்தை இட்டுள்ளன, என்று குறிப்பிட்டார்.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278