Header Logo
SLIC
வணிகம்
வருங்கால சந்ததியினருக்கான சேமிப்புப் பலாபலன்களுடன் கருசரு கடன்களை DFCC வங்கி மேம்படுத்துகிறது

Jul 10, 2026 - 12:31 PM

வருங்கால சந்ததியினருக்கான சேமிப்புப் பலாபலன்களுடன் கருசரு கடன்களை DFCC வங்கி மேம்படுத்துகிறது
Mobitel Inner 1278
EDEX Inner

DFCC வங்கி பிஎல்சி, தனது கருசரு கடன் வாடிக்கையாளர்களுக்கு மதிப்புக்கூட்டப்பட்ட ஒரு புதிய வரப்பிரசாதத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், தகுதியுள்ள ஓய்வூதியதாரர்கள், தமது கணக்குடன் இணைக்கப்பட்ட DFCC ஜுனியர் சேமிப்புக் கணக்குகள் வழியாகத் தங்கள் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுக்காகச் சேமிப்பை மேற்கொள்ளும் அதே வேளையில், சலுகைக் கடன் வீதங்களையும் பெற முடிகிறது. 

பல தாத்தா,பாட்டிமார்கள் தங்கள் குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதில் தொடர்ந்து ஆற்றிவரும் முக்கியப் பங்கை இந்த மேம்படுத்தப்பட்ட திட்டம் அங்கீகரிக்கிறது. அவர்கள் பெரும்பாலும் தங்களின் சொந்த நிதித் தேவைகளைச் சமாளித்துக்கொண்டு, இளைய தலைமுறையினரின் எதிர்கால நல்வாழ்விற்காகவும் பங்களிக்கின்றனர். இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள கருசரு கடன் வாடிக்கையாளர்கள், DFCC ஜுனியர் சேமிப்புக் கணக்கொன்றை ஆரம்பித்து பேணுவதன் மூலமும், குறிப்பிட்ட சேமிப்பு கடப்பாடுகளை நிறைவேற்றுவதன் மூலமும் 0.5% வரை வட்டிச் சலுகைகளைப் பெறலாம். வாடிக்கையாளர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆரம்ப வைப்புத்தொகை தெரிவுகள் மூலமாகவோ அல்லது மாதாந்த நிலையான கட்டளையை ஏற்படுத்துவதன் மூலமாகவோ இதற்குத் தகுதி பெறலாம். இதற்கான சேமிப்புப் பங்களிப்புகள் மாதம் ரூபா. 2,000 தொகையிலிருந்து ஆரம்பிக்கின்றன. 

அரசாங்க ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வு காலத்தில் நிதி ஆதரவை எளிதாகப் பெற்றுக்கொடுப்பதற்காக DFCC கருசரு கடன் திட்டம் உருவாக்கப்பட்டது. சேமிப்புடன் இணைக்கப்பட்ட சலுகைகளை அறிமுகப்படுத்துவது, உடனடி நிதி உதவியை தம்மைச் சார்ந்தோருக்கான நீண்ட கால நிதித் திட்டமிடலுடன் இணைப்பதன் மூலம் இந்த தீர்வை மேலும் வலுப்படுத்துகிறது. 

இந்த முயற்சி குறித்து கருத்து தெரிவித்த, துணைத் தலைவரும்/தீர்வுகள், திட்டங்கள், தனிநபர் மற்றும் வணிக வங்கிச்சேவைப் பிரிவின் தலைமை அதிகாரியுமான அசித பின்னதுவ அவர்கள் கூறுகையில், “ஓய்வூதியதாரர்கள் பலரும் தங்கள் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுக்கு ஆதரவளிப்பதில் தொடர்ந்து தீவிரப் பங்காற்றி, அடுத்த தலைமுறைக்கான வாய்ப்புகளை தோற்றுவிக்க உதவுகிறார்கள். கருசரு திட்டத்தின் இந்த மேம்பாடு, வாடிக்கையாளர்களுக்கு எதிர்காலத்திற்கான சேமிப்பைத் தோற்றுவிக்கும் அதே வேளையில், அவர்களின் சொந்த நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு நடைமுறை வழியை வழங்குவதன் மூலம் அந்த யதார்த்தத்தை அங்கீகரிக்கிறது. குடும்பங்கள் எவ்வாறு திட்டமிடுகின்றன, ஆதரவளிக்கின்றன மற்றும் ஒன்றாக வளர்கின்றன என்பதனுடன் நெருக்கமாகப் பொருந்தக்கூடிய தீர்வுகளை உருவாக்குவதில் எங்கள் அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது. 

இந்தத் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு இரட்டைப் பலனை அளிக்கிறது. சலுகை வீதங்களில் கடனுக்கான அணுகல் மற்றும் நீண்டகால நிதி ஒழுக்கம் மற்றும் எதிர்காலத் தயார்நிலையை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டமைக்கப்பட்ட சேமிப்பு வழிமுறையை இது அவர்களுக்கு வழங்குகின்றது. கடன் வரப்பிரசாதங்களை சேமிப்பு கடப்பாடுகளுடன் இணைப்பதன் மூலம், DFCC வங்கியானது குடும்பங்களுக்குள் நேர்மறையான சேமிப்புப் பழக்கங்களை ஊக்குவிப்பதையும், தலைமுறைகள் மத்தியில் சிறந்த நிதிப் பாதுகாப்பை ஊக்கப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. 

மேம்படுத்தப்பட்ட கருசரு கடன் வரப்பிரசாதமானது, இத்தீர்வு தொடர்புபட்ட விதிமுறைகள், தகுதி பெறுவதற்கான நிபந்தனைகள் மற்றும் கணக்கு பேணல் தேவைகளுக்கு அமைவாக வழங்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள DFCC வங்கி கிளையையோ அல்லது உத்தியோகபூர்வ DFCC வங்கித் தொடர்பு வழிகளையோ அணுகலாம். கருசரு போன்ற திட்டங்களின் மூலம், வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் உள்ள தனிநபர்கள் மற்றும் குடும்பங்களின் தேவைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய நிதித் தீர்வுகளை DFCC வங்கி தொடர்ந்து உருவாக்கி வருகிறது. அதே நேரத்தில் தலைமுறைகள் மத்தியில் அர்த்தமுள்ள மற்றும் நீடித்த மதிப்பையும் உருவாக்குகிறது. 

DFCC வங்கி தொடர்பான விபரங்கள் 

1955 ம் ஆண்டில் நிறுவப்பட்ட DFCC வங்கி பிஎல்சி, 1956 முதல் கொழும்பு பங்குப் பரிவர்த்தனைச் சந்தையில் நிரற்படுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகின்றது. இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குமுறையின் கீழ் இயங்குவதுடன், Fitch Ratings இடமிருந்து A (lka) தரப்படுத்தலையும் பெற்றுள்ள இவ்வங்கி, திறைசேரி, முதலீடு மற்றும் வாணிபக் கடன் தீர்வுகளுடன் சேர்த்து, தனிநபர், வர்த்தக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கான விரிவான வங்கிச்சேவைகள் அனைத்தையும் வழங்கி வருகின்றது. 

வாடிக்கையாளர்களை மையப்படுத்தியும் மற்றும் நிலைபேணத்தக்க புத்தாக்கத்தை அடிப்படையாகவும் கொண்டு, DFCC MySpace போன்ற டிஜிட்டல் தளங்கள், 133 கிளைகளைக் கொண்ட வலையமைப்பு மற்றும் LankaPay வலையமைப்பிலுள்ள 6,000 க்கும் மேற்பட்ட ATM மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி, இடைவிடாத மற்றும் பாதுகாப்பான வங்கிச்சேவை அனுபவத்தை DFCC வங்கி வழங்கி வருகின்றது. நிலைபேற்றியல் சார்ந்த முயற்சிகளுக்கான கடன் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சிகள் ஆகியவற்றுக்காக அங்கீகாரத்தைச் சம்பாதித்து, இவை தொடர்பில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாகத் திகழ்ந்து வரும் DFCC வங்கி, சூழல் மீதான தாக்கங்களைக் குறைத்து, நீண்ட கால அடிப்படையில் பொருளாதார நெகிழ்திறனை வளர்ப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றது.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278