Header Logo
SLIC
வணிகம்
Prime Group இலங்கையின் “அதிக அபிமானம் மற்றும் நம்பகமான” ரியல் எஸ்டேட் வர்த்தக நாமமாக LMD இனால் தெரிவு செய்யப்பட்டுள்ளது

Jul 10, 2026 - 12:34 PM

Prime Group இலங்கையின் “அதிக அபிமானம் மற்றும் நம்பகமான” ரியல் எஸ்டேட் வர்த்தக நாமமாக LMD இனால் தெரிவு செய்யப்பட்டுள்ளது
Mobitel Inner 1278
EDEX Inner

Prime Group நிறுவனம் LMD சஞ்சிகையின் மிக உயரிய மூன்று அங்கீகாரங்களை சுவீகரித்துள்ளது. “ரியல் எஸ்டேட் துறையின் சிறந்தவற்றுள் சிறந்த வர்த்தகநாமம்”, “அதிக அபிமானம் பெற்ற கூட்டாண்மை வர்த்தக நாமம்” மற்றும் “அதிகம் விரும்பப்படும் சேவை வர்த்தகநாமம்” ஆகிய விருதுகளை அது வென்றுள்ளது. இந்த மூன்று கௌரவிப்புகள், நவீன ரியல் எஸ்டேட் துறையில் இலங்கையின் உண்மையான முன்னணி நிறுவனம் என்ற Prime Group இன் நிலையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. 30 வருடங்களுக்கும் மேலாகத் தடையற்ற மற்றும் நம்பகமான சேவைகளை வழங்கி வரும் இந்நிறுவனம், வாடிக்கையாளர் நம்பிக்கை, புத்தாக்கம் மற்றும் சந்தை தலைமைத்துவம் ஆகியவற்றில் தொடர்ந்து புதிய மைல்கற்களை நிலைநாட்டி வருகின்றது. இந்த நன்மதிப்பு, வாடிக்கையாளர்கள் இந்த வர்த்தகநாமத்தின் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையின் மூலம் கட்டியெழுப்பப்பட்டதாகும். 

இலங்கையின் நவீன ரியல் எஸ்டேட் துறையின் அசல் முன்னோடியான Prime Group, நாட்டின் நகர அபிவிருத்திக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் பங்களிப்பு வழங்கிய 30 வருட காலப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. கடந்த மூன்று தசாப்தங்களாக, இக்குழுமம் குடியிருப்பு, வணிக மற்றும் நவீன வாழ்க்கை முறை சார்ந்த துறைகளில் 70 க்கும் மேற்பட்ட வீட்டுத்தொகுதிகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புத் திட்டங்களையும், 10,000 க்கும் மேற்பட்ட காணி அபிவிருத்தித் திட்டங்களையும் வழங்கி, இலங்கை முழுவதும் நவீன வாழ்க்கை மற்றும் பணிச்சூழலை வடிவமைத்துள்ளது. 

வாடிக்கையாளர்களின் விசுவாசம், Prime Group நிறுவனத்தின் வெற்றிக்கான பிரதான உந்துசக்தியாகத் தொடர்ந்து விளங்குகின்றது. தொடர்ந்தும் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்கள், அவர்களது பரிந்துரைகள் மற்றும் வர்த்தக நாமத்தின் மீதான நிலையான நம்பிக்கை ஆகியன அதன் வெளிப்படைத்தன்மையையும் நம்பகத்தன்மையையும் எடுத்துக்காட்டுவதுடன், Prime நிறுவனத்தை அதன் போட்டியாளர்களிடமிருந்து தனித்துவப்படுத்திக் காட்டுகின்றன. பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் நிலவிய காலப்பகுதிகளில்கூட, நிறுவனம் தனது வலுவான விற்பனை வேகத்தைத் தக்கவைத்துக் கொண்டது; இது இலங்கை குடும்பங்களும் முதலீட்டாளர்களும் இந்நிறுவனத்தின் மீது வைத்துள்ள நீடித்த நம்பிக்கைக்குக் கிடைத்த நேரடிச் சான்றாகும். 

Prime Group பிரதம நிறைவேற்று அதிகாரி ருமிந்த ரன்தெனிய கருத்துத் தெரிவிக்கையில், “LMD சஞ்சிகையின் மூன்று பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்டுள்ள இந்த அங்கீகாரம், முழுமையாக எமது வாடிக்கையாளர்களுக்கு உரித்தானது. 30 வருடங்களுக்கும் மேலாக, பல குடும்பங்களும் முதலீட்டாளர்களும் தங்களது வாழ்க்கையின் மிக முக்கியமான சில தீர்மானங்களை எடுப்பதில் எம்மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த கௌரவம் அந்த நம்பிக்கையை பிரதிபலிக்கின்றது. அந்த நம்பிக்கையைத் தொடர்ந்து தக்கவைப்பதும், வழங்கிய ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்றுவதும், சரியான தொழில்நுட்பத்தை உள்வாங்குவதும், அத்துடன் Prime நாமத்தை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள புதிய சந்தைகளுக்குக் கொண்டு செல்வதும் எமது தற்போதைய பணியாகும்.” என்றார். Prime டிஜிட்டல் தொழில்நுட்பத்திலும் உறுதியாக கால்பதித்துள்ளது. ஒருங்கிணைந்த விற்பனைத் தளங்கள், Prime Edge மொபைல் app, AI மூலமான வாடிக்கையாளர் தொடர்பாடல் மற்றும் தடையற்ற கட்டணச் செலுத்தல்களுக்கான தீர்வுகள் ஆகியன, வாடிக்கையாளரின் ஆரம்பக்கட்ட விசாரிப்புகள் முதல் விற்பனைக்கு பிந்தைய சேவை வரையிலான ஒட்டுமொத்த பயணத்தையும் மிகவும் சுமுகமானதாக மாற்றியுள்ளன. 

இவற்றுடன் மேலும், கொழும்பு போர்ட் சிட்டியில் அமையவுள்ள Prime & Melwa நிறுவனங்களின் மைல்கல் திட்டமான Prime Marina, அதன் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே 400 க்கும் மேற்பட்ட முன்பதிவுகளைப் பெற்று, பெருமளவு வரவேற்பையும் ஈர்ப்பையும் பெற்றுள்ளது. Prime Marina Sales Suite இன் பிரமாண்டமான அங்குரார்ப்பண நிகழ்வு, இத்திட்டத்தின் பிரமாண்டத்தையும் அதன் இலக்கையும் வெளிப்படுத்தியுள்ளதுடன், இலங்கையில் அனைவரும் விரும்பும் மிக முக்கிய முகவரிகளில் ஒன்றாக இதனை நிலைநிறுத்தியுள்ளது. அரிய மெரினா கடற்கரைக்கு முகப்பான அமைவிடம் மற்றும் உலகத்தரம் வாய்ந்த வடிவமைப்பு பங்காளர்களைக் கொண்டுள்ள Prime Marina, வலுவான முதலீட்டாளர் நம்பிக்கையை வெளிப்படுத்துவதுடன், இலங்கை ரியல் எஸ்டேட் துறையை உலகளாவிய ரீதியில் கொண்டு செல்வதற்கான இலக்கையும் பறைசாற்றுகின்றது. மேலும், நிறுவனத்தின் வளர்ச்சிப் பாதை தொடர்ந்து மேல்நோக்கி உயர்ந்து வருகின்றது. Prime Group தனது கிளை வலையமைப்பை இலங்கை முழுவதும் விரிவுபடுத்தி வருவதுடன், வெளிநாட்டுப் பிராந்தியங்களிலும் தனது இருப்பை மேலும் வலுப்படுத்தி வருகின்றது. புலம்பெயர் சமூகத்தினரையும் வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் மையமாகக் கொண்டு, நீண்ட கால உலகளாவிய வர்த்தக முத்திரையாக உருவெடுக்கும் இலக்குடன் இந்நிறுவனம் தனது வளர்ச்சிப் பயணத்தை முன்னெடுத்து வருகிறது. 

சந்தையின் ஒவ்வொரு சவால்களுக்கு மத்தியிலும், Prime Group தனது விநியோகத் தரங்களை நிலையாகப் பேணி வந்துள்ளதுடன், மூலோபாய விரிவாக்கத்தின் மூலம் நீண்ட கால முதலீட்டுப் பாதுகாப்பையும் நிலையான வளர்ச்சியையும் வழங்கி வருகின்றது. வலுவான பங்குதாரர் உறவுகள் மற்றும் மதிப்பு உருவாக்கத்திற்கான அர்ப்பணிப்பு ஆகியன, இலங்கை குடும்பங்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் நேர்மை மற்றும் நீண்ட கால மதிப்பிற்குரிய ஒரு வர்த்தக நாமமாக Prime Group கொண்டுள்ள நற்பெயரைத் தொடர்ந்து வலியுறுத்துகின்றன. அனைத்திற்கும் மேலாக, இந்த மூன்று அங்கீகாரமானது, Prime நிறுவனத்தின் வெற்றிக்கான அடித்தளமாக விளங்கும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை மற்றும் விசுவாசத்திற்குச் சான்றாக அமைந்துள்ளது. இந்தச் சாதனையை சாத்தியமாக்கிய தங்கள் மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கும், தொடர்ச்சியான ஆதரவிற்கும் நிறுவனம் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278