Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
தேசிய விருது பெற்ற இயக்குநர் காலமானார்!

Jul 10, 2026 - 12:50 PM

தேசிய விருது பெற்ற இயக்குநர் காலமானார்!
Mobitel Inner 1278

தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான இரா.செழியன் சென்னையில் இன்று (10) காலை காலமானார். 

ஒளிப்பதிவாளர் செழியன் உடல் நலக்குறைவு காரணமாக தரமணியில் உள்ள தனியார் கேன்சர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கல்லூரி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளரான செழியன் பணியாற்றி உள்ளார். ஒளிப்பதிவாளரும் உலக சினிமா என்ற நூலாசிரியருமான இரா.செழியன் இயக்கிய டூலெட் (TOLET) திரைப்படம் 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்றது. 

சிவகங்கையை சேர்ந்தவரான செழியன் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். எழுத்தாளர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை பெற்றவர் இரா.செழியன். 

செழியன் மறைவுக்கு திரையுலகினரும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

Mobitel 1278