Header Logo
Mogo Academy

செய்திகள்
ட்ரோன் உதவியுடன் டெங்கு சுற்றிவளைப்பு

Jul 10, 2026 - 03:25 PM -

0

ட்ரோன் உதவியுடன் டெங்கு சுற்றிவளைப்பு
Mobitel inner

களுத்துறை மாவட்டத்தில் டெங்கு நுளம்பு குடம்பிகள் பெருகுவதாகக் கண்டறியப்பட்ட பின்வத்தை, வாதுவை மற்றும் மொல்லிகொட பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளை மையமாகக் கொண்டு, இன்று (10) விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 

வாதுவை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, இலங்கை விமானப்படையின் ட்ரோன் பிரிவுக்குச் சொந்தமான ட்ரோன் கமரா தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. 

இதன்போது, பொது சுகாதார பரிசோதகர்கள் சாதாரண முறையில் சென்றடைய முடியாத உயரமான கட்டிடங்கள் மற்றும் கூரைகளின் மீது டெங்கு நுளம்பு குடம்பிகள் பெருகும் இடங்கள் உள்ளனவா என்பது ட்ரோன் கமராவின் உதவியுடன் கண்காணிக்கப்பட்டது. 

வாதுவை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கலிகா பெர்னாண்டோவின் ஆலோசனையின் பேரில், பிரதான பொது சுகாதார பரிசோதகர் எஸ். எம். எஸ். சஞ்சீவ உள்ளிட்ட பல பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் இணைந்து இந்த கூட்டு நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.

MOST READ

காணொளி
உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

இது மிகவும் மோசமான செயல்!

இது மிகவும் மோசமான செயல்!

Mobitel Upahara