Header Logo
Mogo Academy

செய்திகள்
பெல்ஜியத்தை வீழ்த்திய ஸ்பெயின் அரையிறுதிக்கு தகுதி

Jul 11, 2026 - 05:34 AM -

0

பெல்ஜியத்தை வீழ்த்திய  ஸ்பெயின் அரையிறுதிக்கு தகுதி
Mobitel inner

உலகக் கிண்ணம் கால்பந்தாட்ட தொடரின் காலிறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. 

போட்டியின் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணிக்கு 30-வது நிமிடத்தில் பாபியன் ரூயிஸ் கோல் அடித்து முன்னிலையை பெற்றுக் கொடுத்தார். 

இதற்கு பதிலடி கொடுத்த பெல்ஜியம் அணியின் சார்ல்ஸ் டி கெட்லேரே, 41-வது நிமிடத்தில் தலையால் ஒரு கோல் அடித்தார். 

இதனால், 1-1 என்ற சமநிலைக்கு வந்தது. 

போட்டியின் 2-வது பாதியில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடின. 

ஆட்டம் மேலதிக நேரத்தை நோக்கி செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 88-வது நிமிடத்தில் மாற்று வீரராக களமிறங்கிய மிகேல் மெரினோ வெற்றிக்கான கோலை பதிவு செய்தார். 

இதனால் ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. 

இந்த வெற்றியின் மூலம் ஸ்பெயின் அணி அரையிறுதியில் பிரான்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

Mobitel Upahara