Jul 11, 2026 - 08:40 AM -
0
ஹோர்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது என்பதை ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என அமெரிக்கா கோரியுள்ளது.
அத்துடன் வர்த்தகக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதை நிறுத்த உறுதியளிக்க வேண்டும் என்றும் இன்றைய பேச்சுவார்த்தைகளின் போது அமெரிக்கா வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அமெரிக்க மற்றும் ஈரானுக்கு இடையிலான தற்காலிக போர் நிறுத்த உடன்படிக்கை முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி முன்னதாக கூறியிருந்த போதிலும் அதனை மீண்டும் தொடருவதற்கான இணக்கத்தை நேற்று வௌியிட்டிருந்தார்.
இதனடிப்படையிலேயே ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என அமெரிக்க பிரதிநிதிகள் வலியுறுத்துவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
வர்த்தக கப்பல்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு ஒரு தவறு என்பதை ஈரான் தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொண்டதாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இருப்பினும், ஈரானுக்குள் இருக்கும் ஒரு முரண்பாடான குழுவே இதற்குப் பொறுப்பு என ஈரானியர்கள் தெரிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
