Header Logo
Mogo Academy

சினிமா
நடிகர் தர்மா மகேஷ் வீட்டுக்குள் பாய்ந்த கார்!

Jul 11, 2026 - 10:23 AM -

0

நடிகர் தர்மா மகேஷ் வீட்டுக்குள் பாய்ந்த கார்!
Mobitel inner

தெலுங்கு நடிகர் தர்மா மகேஷ், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் பிலிம் நகர் பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். 'சிந்தூரம்', 'டிரிங்கர் சாயி' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். 

இந்நிலையில், கடந்த 09 ஆம் திகதி நள்ளிரவில் அதிவேகமாக வந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து, நடிகர் தர்மா மகேஷின் வீட்டின் நுழைவாயில் இரும்பு கதவை உடைத்துக்கொண்டு வளாகத்திற்குள் புகுந்தது. இந்த திடீர் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த விபத்தில் வீட்டின் நுழைவாயில், இரும்பு கதவு மற்றும் சுற்றுச்சுவர் கடுமையாக சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக, அப்போது வீட்டில் இருந்த தர்மா மகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. 

சம்பவம் குறித்து தகவல் அறிந்த பிலிம் நகர் பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று, விபத்துக்குள்ளான காரில் இருந்த சில இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விபத்துக்கான காரணம் குறித்து அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

காரில் இருந்தவர்கள் மதுபோதையில் அதிவேகமாக வாகனம் ஓட்டியதால் இந்த விபத்து நடந்ததா அல்லது நடிகர் தர்மா மகேஷை குறிவைத்து முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். விசாரணைக்குப் பிறகே சம்பவத்தின் உண்மையான பின்னணி தெரியவரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

MOST READ

காணொளி
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

Mobitel Upahara