Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
Prime Lands நிறுவனம் YouTube Silver Play Button ஐப் பெற்ற இலங்கையின் முதலாவது ரியல் எஸ்டேட் நிறுவனம் எனும் பெருமையை பெற்றுள்ளது

Sep 21, 2026 - 03:41 PM

Prime Lands நிறுவனம் YouTube Silver Play Button ஐப் பெற்ற இலங்கையின் முதலாவது ரியல் எஸ்டேட் நிறுவனம் எனும் பெருமையை பெற்றுள்ளது
Mobitel Inner 1278

100,000 Subscribers ஐக் கடந்து, பெருமைக்குரிய YouTube Silver Play Button ஐப் பெற்ற நாட்டின் முதலாவது ரியல் எஸ்டேட் நிறுவனம் என்ற பெருமையை Prime Lands எய்தி, இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் புதிய கால்தடத்தைப் படைத்துள்ளது. Prime Group தனது 30 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், மூன்று தசாப்த கால வளர்ச்சி மற்றும் புத்தாக்கங்களுடன் இக்கணிசமான டிஜிட்டல் சாதனையும் இணைந்துள்ளது. 

YouTube இன் Creator Awards திட்டத்தின் அங்கமாக வழங்கப்படும் இந்த Silver Play Button, கணிசமான சந்தாதாரர்களின் மைல்கற்களை எட்டும் சேனல்களை அங்கீகரிப்பதாக அமைந்துள்ளது. Prime Lands ஐப் பொறுத்தவரை, இந்த மைல்கல்லை எட்டியமை பார்வையாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட வளர்ச்சியை மட்டும் காண்பிக்காமல், பாரம்பரிய சந்தைப்படுத்தல் முறையிலிருந்து டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு முன்னுரிமை அளிக்கும் அணுகுமுறையை நோக்கிய அதன் மாற்றத்தையும் பிரதிபலிக்கிறது. அத்துடன், இலங்கையர்கள் ரியல் எஸ்டேட் துறையைக் கண்டறியும் மற்றும் அணுகும் முறையை மறுவரையறை செய்வதற்கு உள்ளடக்கம், தொழில்நுட்பம் மற்றும் கதைசொல்லல் ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கான அதன் அர்ப்பணிப்பையும் இது காட்டுகிறது. இன்று, 600,000 க்கும் மேற்பட்ட சந்தாதாரர்களைக் கொண்ட ஒரு YouTube community ஐக் கொண்டுள்ள Prime Lands, தனது டிஜிட்டல் தொடர்புகளைத் தொடர்ந்து விஸ்தரிப்பதுடன், இலங்கை முழுவதிலும் உள்ள சொத்துத் தேடுபவர்களுடனான தனது உறவையும் மேலும் ஆழப்படுத்தி வருகின்றது. 

YouTube Silver Play Button என்பது, Prime Lands ஐப் பொறுத்தவரை வெறும் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை எட்டிய ஒரு சாதனையை விட மேலானதாகும். இது தனது டிஜிட்டல் பார்வையாளர்களுடன் இந்நிறுவனம் கட்டியெழுப்பியுள்ள நம்பிக்கையையும், இலங்கையில் ரியல் எஸ்டேட் சந்தைப்படுத்தலை மறுவடிவமைப்பு செய்வதில் அது வகிக்கும் முக்கிய பங்கையும் பிரதிபலிக்கிறது. உண்மையான மற்றும் அறிவூட்டும் உள்ளடக்கங்கள் மூலமாக சொத்துக்கள், அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் கொள்வனவு செய்யும் நடைமுறைகளை வெளிப்படுத்துவதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களது தெரிவுகளைப் பற்றி மேலும் தன்னம்பிக்கையுடன் ஆராயவும், சொத்துக்கள் தொடர்பில் சிறந்த மற்றும் தெளிவான முடிவுகளை எடுக்கவும் Prime Lands வழிவகை செய்கிறது. 

Prime Lands (Pvt) Ltd இன் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ருமிந்த ரந்தெனிய கருத்துத் தெரிவிக்கையில், “வாங்குபவர்களுக்குத் தெளிவையும் தன்னம்பிக்கையையும் வழங்கி அவர்களை வலுப்படுத்துவதே எப்போதும் எங்களது மூலோபாயமாக இருந்து வருகிறது. எமது YouTube பயணத்தின் மூலம், மக்கள் ரியல் எஸ்டேட் முடிவுகளை எடுக்கும் முறையை நாங்கள் மாற்றியமைத்துள்ளோம். ஆழ்ந்த கருத்துக்களையும் அறிவையும் வழங்கும் உள்ளடக்கங்கள் வாயிலாகச் சிறந்த சொத்துத் தெரிவுகளுக்கு வழிகாட்டி, வாய்ப்புகளைக் காட்சிப்படுத்தவும், சந்தையின் நகர்வுகளைப் புரிந்து கொள்ளவும், தெளிவான முடிவுகளை எடுக்கவும் மக்களுக்குக் கரங்கொடுத்துள்ளோம். இன்று, Prime Lands இலங்கையின் சொத்துத் துறையில் மிகப் பெரிய மற்றும் மிகவும் விசுவாசமான டிஜிட்டல் பார்வையாளர் பட்டாளத்தைக் கட்டியெழுப்பியுள்ளதுடன், நாட்டின் வேறு எந்தவொரு ரியல் எஸ்டேட் வர்த்தக நாமங்களை எட்டாத சாதனையை அடைந்துள்ளது. டிஜிட்டல் கதைசொல்லலையும் மூலோபாய தொலைநோக்குப் பார்வையையும் ஒன்றிணைத்து, சொத்துக்களைக் காட்சிப்படுத்துவதோடு, வாங்குபவர்கள் ரியல் எஸ்டேட் வாய்ப்புகளை ஆராய்வதற்கான ஒரு புதிய வழிமுறையையும் முன்னோடியாக அறிமுகப்படுத்த நாங்கள் இலக்கு வைத்துள்ளோம்.” என்றார். 

Prime Lands இன் டிஜிட்டல் ஈடுபாட்டு மூலோபாயத்தின் பிரதான தூணாக YouTube உருவெடுத்துள்ளதுடன், வாடிக்கையாளர்கள் சொத்துக்களை அனுபவிக்கும் மற்றும் ஆராயும் முறையையும் இது மாற்றியமைத்துள்ளது. விரிவான நேரடி விளக்கங்கள், நிர்மாணப் பணிகளின் முன்னேற்றப் புதுப்பிப்புகள் மற்றும் சூழவுள்ள பகுதிகள் பற்றிய நுண்ணறிவுகள் மூலம், சாத்தியமான கொள்வனவாளர்கள் எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்னர் அத்திட்டங்களை மிக நெருக்கமாகப் பார்வையிடும் வாய்ப்பை இந்த channel வழங்குகிறது. வழக்கமான விளம்பரச் செய்திகளுக்கு அப்பால் உண்மையான சொத்துக்களையும், அவற்றின் நிஜமான முன்னேற்றத்தையும் தனது உள்ளடக்கத்தின் மையமாகக் கொண்டு செயல்படுவதன் மூலம், Prime Lands வெளிப்படைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் முன்னுரிமை அளிக்கிறது. இது வாடிக்கையாளர்கள் தங்களது தேடலின் மீதான அதிகக் கட்டுப்பாட்டைப் பெறவும், சொத்துக்கள் தொடர்பான முடிவுகளை அதிக தன்னம்பிக்கையுடன் எடுக்கவும் பெரிதும் உதவுகிறது. 

மூன்று தசாப்த கால அனுபவத்துடனும், நாடு முழுவதும் 70 க்கும் மேற்பட்ட வீடமைப்பு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புத் திட்டங்கள், அத்துடன் 10,000 க்கும் மேற்பட்ட காணி அபிவிருத்தித் திட்டங்கள் அடங்கிய வலுவான பின்னணியுடனும், Prime Lands இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் ஒரு உறுதியான அடித்தளத்தைக் கட்டியெழுப்பியுள்ளது. அதிகரித்து வரும் அதன் டிஜிட்டல் பார்வையாளர் பட்டாளமானது, அந்த பாரம்பரியத்தின் ஒரு புதிய பரிமாணத்தைப் பிரதிபலிப்பதுடன், இலங்கையர்கள் ரியல் எஸ்டேட் துறையைக் கண்டறியும் மற்றும் அணுகும் முறையை மறுவடிவமைப்பு செய்ய Prime Lands எவ்வாறு டிஜிட்டல் உள்ளடக்கங்களைப் பயன்படுத்தி வருகின்றது என்பதையும் வெளிப்படுத்துகிறது. 

Prime Group பற்றி 

Prime Group என்பது சொத்து அபிவிருத்தி மற்றும் நகர அபிவிருத்தித் துறையில் 30 ஆண்டுகால பாரம்பரியத்தைக் கொண்ட இலங்கையின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமாகும். ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல், நாட்டின் குடியிருப்பு, வணிக மற்றும் பலநோக்கு சொத்துத் துறையின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வரும் இந்நிறுவனம், நாடு முழுவதும் 70 க்கும் மேற்பட்ட வீடமைப்பு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புத் திட்டங்களையும், 10,000 க்கும் மேற்பட்ட காணி அபிவிருத்தித் திட்டங்களையும் வெற்றிகரமாக வழங்கி சாதனை படைத்துள்ளது. காணி அபிவிருத்தி, வீடமைப்பு, அடுக்குமாடி குடியிருப்புகள், வணிகச் சொத்துக்கள் மற்றும் பலநோக்கு அபிவிருத்திகள் ஆகியவற்றில் பரந்த நிபுணத்துவத்தைக் கொண்டுள்ள Prime Group, இலங்கை முழுவதும் உள்ள சமூகங்களுக்கு நவீன வாழ்வியல் மற்றும் பணிச்சூழலை உருவாக்க உதவியுள்ளது. நிறுவனத்தின் மூன்று தசாப்த கால சாதனைகள், தரம், விநோதக் கண்டுபிடிப்புகள் மற்றும் பொறுப்புமிக்க சொத்து அபிவிருத்தி மீதான அதன் நீண்டகால அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றன.' 

ரியல் எஸ்டேட் துறைக்கு அப்பால், Prime Group தேசத்தைக் கட்டியெழுப்புதல், நல்வாழ்வுத் தன்மை மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றிலும் தீவிர உறுதியுடன் செயல்பட்டு வருகின்றது. இந்நிறுவனம் சொத்து அபிவிருத்தியைத் தாண்டி, தான் சேவை செய்யும் பரந்த சமூகங்களின் நலன், உள்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த பல்வேறு நலன்புரி முன்முயற்சிகளுக்குத் தொடர்ச்சியாக ஆதரவளித்து வருகின்றது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

Mobitel 1278