Jul 11, 2026 - 03:40 PM -
0
யாழ்ப்பாணத்திலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி மீன்களை ஏற்றிச் சென்ற கெப் ரக வாகனம் ஒன்று பரந்தன் வீதியூடாக முல்லைத்தீவு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது வெளிகண்டல் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து, பாலத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் வாகனத்தின் உதவியாளர் சிறுகாயங்களுக்கு உள்ளான நிலையில், சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
--
