Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
பாடகி எஸ். ஜானகியின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

Jul 12, 2026 - 08:12 AM

பாடகி எஸ். ஜானகியின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு
Mobitel Inner 1278

இந்திய சினிமாவில் பழம்பெரும் பாடகியாக திகழ்ந்தவர் எஸ்.ஜானகி. ஜானகியம்மா, கான கோகிலா, தென்னிந்தியாவின் நைட்டிங்கேல், இசை அரசி என்று பல்வேறு பட்டங்களில் புகழப்படும் எஸ்.ஜானகி, இந்திய சினிமா முழுமைக்கும் அறியப்பட்ட பாடகி ஆவார். 

சுமார் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். 2016-ம் ஆண்டுக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய எஸ்.ஜானகி மைசூருவில் தனது மகன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். 

இவரது ஒரே மகன் முரளி கிருஷ்ணா கடந்த ஜனவரி மாதம் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். மருமகள் உமா மற்றும் பேரப்பிள்ளைகளுடன் மைசூருவிலேயே ஜானகி வசித்து வந்தார். 

தனது ஒரே மகன் இறந்த துயரத்தில் இருந்த ஜானகியை உடல் நலக்குறைவும் பற்றிக்கொண்டது. 

கடந்த சில மாதங்களாகவே அவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். நேற்று அவரது உடல்நிலை மோசம் அடையவே உடனடியாக மைசூருவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஜானகிக்கு சிகிச்சையின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில் மைசூருவில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் ஜானகியின் உடல் இன்று (12) பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படுகிறது. 

அதன்பின்னர் பிற்பகல் 3.00 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, கனியனகுந்தி என்ற இடத்தில் இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டு ஜானகி யின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது. 

இதற்கான ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினர் செய்து வருகிறார்கள். 

பாடகி ஜானகியின் மறைவிற்கு திரையுலகினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

Mobitel 1278