Jul 13, 2026 - 10:23 AM -
0
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி அதிகம் வசூலித்த திரைப்படமாக "கட்டா குஸ்தி 2" மாறியது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வாரம் வெளியான கட்டா குஸ்தி 2 திரைப்படம் விமர்சனம் மட்டுமின்றி வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ரிலீசானது முதலே நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த திரைப்படம் வணிக ரீதியிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக இரண்டாவது வாரத்திலும் இந்தப் படம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டு இருப்பதாகவும், காட்சிகளை 700 இற்கும் அதிக திரைகள் வரை நீட்டித்துள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் வெளியான நிலையில், கட்டா குஸ்தி 2 திரைப்படம் உலகளவில் இதுவரை 50 கோடி ரூபா வசூலை கடந்துள்ளது. அந்த வகையில், இது விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி அதிகம் வசூலித்த திரைப்படமாகி இருக்கிறது.
முன்னதாக விஷ்ணு விஷால் நடித்து வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற "ராட்சசன்" திரைப்படம் 40 கோடி ரூபாவுக்கும் அதிகமாக வசூலித்தது அதிகமாக இருந்தது.
