Header Logo
SLIC
வணிகம்
SLT-MOBITEL இனால் LPL கிரிக்கட் போட்டிகளை பிரச்சாரப்படுத்தும் நாடளாவிய ‘Road to LPL’ வீதி உலா முன்னெடுப்பு

Jul 13, 2026 - 04:46 PM

SLT-MOBITEL இனால் LPL கிரிக்கட் போட்டிகளை பிரச்சாரப்படுத்தும் நாடளாவிய ‘Road to LPL’ வீதி உலா முன்னெடுப்பு
Mobitel Inner 1278
EDEX Inner

தேசிய தகவல் தொடர்பாடல் தீர்வுகள் வழங்குனரான SLT-MOBITEL, 2026 லங்கா ப்ரீமியர் லீக் (LPL) கிரிக்கட் போட்டிகளை கொண்டாடும் வகையில் நாடளாவிய ‘Road to LPL’ வீதி உலாவை அறிமுகம் செய்துள்ளது. போட்டித் தொடரின் உத்தியோகபூர்வ ஊடக மற்றும் ஒளிபரப்பு பங்காளராக இணைந்துள்ள SLT-MOBITEL PEOTV இன் உடன் இணைந்து இந்த பிரச்சாரப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

IPG Group மற்றும் ஸ்ரீ லங்கா கிரிக்கட் ஆகியவற்றுடன் SLT-MOBITEL இணைந்து ஏற்பாடு செய்துள்ள ‘Road to LPL’ இல், உத்தியோகபூர்வ ஊக்குவிப்புப் பிரச்சார ட்ரக் அடங்கியுள்ளதுடன், இது பிரதான அணிகள் பிரதிநிதித்துவப்படுத்தும் நகரங்களான காலி, கண்டி, யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் தம்புளை ஆகிய பகுதிகளுக்கும், நாட்டின் இதர பிரதான நகரங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளது. தேசிய பெருமை, வர்த்தக நாமத்தின் வெளிப்படைத் தோற்றம், ஊழியர் ஈடுபாடு மற்றும் ரசிகர்களுடன் இணைப்பை ஏற்படுத்தல் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கான SLT-MOBITEL இன் அர்ப்பணிப்பை இந்த நிகழ்ச்சித் திட்டம் வெளிப்படுத்தியுள்ளது. 

2026 ஜுலை 10 ஆம் திகதி இந்த வீதி உலா உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியதுடன், நாடளாவிய ரீதியிலான ஊக்குவிப்பு பிரச்சார பயணிப்புத் திட்டத்தின் ஆரம்பமாக அமைந்திருந்தது. லங்கன் ப்ரீமியர் லீக் போட்டிகளை ரசிகர்கள் மற்றும் சமூகங்களுடன் நெருக்கப்படுத்தி, அப்போட்டிகள் விறுவிறுப்பை அவர்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. 

இந்த முயற்சியின் ஊடாக, கிரிக்கெட் ரசிகர்கள் போட்டித் தொடர், அதன் அணிகள் மற்றும் LPL வீரர்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்வதற்கும், அத்துடன் கிரிக்கெட் கருப்பொருள் சார்ந்த பல்வேறு பொழுதுபோக்கு அனுபவங்களை அனுபவிப்பதற்குமான வாய்ப்புகளை SLT- MOBITEL ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இது, Spin the Wheel, VR Cricket Challenge, Scream for the Team மற்றும் Gully Cricket உள்ளிட்ட interactive activities மூலம் லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் சிலிர்ப்பான அனுபவத்தை ரசிகர்கள் நேரடியாகப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியது. அத்துடன், ரசிகர்கள் (LPL Canvas இல் தமது கையொப்பங்களை இடுவதன் மூலம் தமக்குப் பிடித்த அணிகளுக்கு தம் ஆதரவை வெளிப்படுத்தி உற்சாகப்படுத்த முடிந்ததுடன், அற்புதமான பரிசுகள் மற்றும் LPL போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டுகளை வெல்லும் வாய்ப்பையும் பெற்றனர். இந்த உற்சாகத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், காலி, கண்டி, யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் தம்புளை ஆகிய ஐந்து LPL அணிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்கள் இந்த வீதி உலாவில் கலந்துகொண்டு, தமது வருகையாலும் விளையாட்டின் மீதான ஆர்வத்தாலும் ரசிகர்களை ஊக்குவித்தனர். 

இந்த வீதி உலா 2026 ஜூலை 13 ஆம் திகதி கொழும்பிலுள்ள SLT தலைமையகத்தை வந்தடைந்ததுடன், இலங்கையின் முதன்மையான உள்நாட்டுக் கிரிக்கெட் தொடரின் விறுவிறுப்பான, உற்சாகமான சூழலை SLT-MOBITEL ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நேரடியாகக் கொண்டு சேர்த்தது. நாடளாவிய பிரச்சாரத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்த இந்நிகழ்வு, ஊழியர்களுக்கும் அற்புதமான வீதி உலா அனுபவத்தை அனுபவிப்பதற்கான வாய்ப்பை வழங்கியது. கொழும்பில் நடைபெற்ற இந்தச் செயற்பாட்டில் மாத்திரம் பிரத்தியேகமாக LPL கிண்ணம் உத்தியோகபூர்வமாகத் திரைநீக்கம் செய்யப்பட்டதுடன், மறக்கமுடியாத கிரிக்கெட் கருப்பொருள் சார்ந்த தொடர்ச்சியான செயல்பாடுகளும் இடம்பெற்றன. அத்துடன், பங்கேற்பாளர்களுக்கு LPL Canvas இல் தமது கையொப்பங்களை இடுவதற்கும், LPL அணிகளின் தலைவர்களைச் சந்திப்பதற்குமான சந்தர்ப்பமும் வழங்கப்பட்டது. இந்தச் செயல்பாடானது மறக்கமுடியாத நினைவுகளை உருவாக்கியதுடன், SLT-MOBITEL மற்றும் லங்கா ப்ரீமியர் லீக் ஆகிய இரு தரப்பிற்குமான அதிகளவிலான விழிப்புணர்வையும் தகைமையையும் ஏற்படுத்தியது. 

இந்தக் கொண்டாட்டங்கள் 2026 ஜூலை 17 அன்று நடைபெறவுள்ள பிரம்மாண்டமான LPL Drone Show உடன் உச்சக்கட்டத்தை அடையவுள்ளன. இது விளையாட்டு, தொழில்நுட்பம், பொழுதுபோக்கு மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றின் சக்திவாய்ந்த இணைப்பைக் குறிப்பிடுவதாக அமையும். இத்தொடர் 2026 ஆகஸ்ட் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இலங்கை முழுவதிலுமுள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இத்தொடர் முழுவதையும் PEOTV மற்றும் PEO MOBILE உள்ளடங்கலாக, SLT-MOBITEL PEOTV தளங்கள் ஊடாகவும் ஏனைய டிஜிட்டல் தளங்கள் மூலமும் நேரலையாக கண்டுகளிக்க முடியும். போட்டிகள் அனைத்தும் அசல் HD தரத்தில் ஒளிபரப்பப்படவுள்ளதுடன், இது பார்வையாளர்களுக்கு மிகத் தெளிவான காட்சிகளையும், மைதானத்திலிருந்து பார்ப்பதைப் போன்ற சிறந்த நேரடி அனுபவத்தையும் வழங்கும். 

LPL தொடரின் உற்சாகத்தை ஊழியர்கள் மற்றும் ரசிகர்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்கு அப்பால், SLT-MOBITEL இன் ‘Road to LPL’ வீதி உலா, சமூகங்களை ஒன்றிணைப்பதற்கான கிரிக்கட் விளையாட்டின் சக்தியைக் கொண்டாடும் ஒரு நிகழ்வாகவும் அமைந்தது. அத்துடன், ரசிகர்களுக்கு இந்த விளையாட்டை புதிய மற்றும் ஈர்க்கக்கூடிய வழிகளில் அனுபவிப்பதற்கானதொரு சிறந்த வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தது. 

LPL தொடருடனான SLT-MOBITEL இன் இந்த பங்களிப்பு, கிரிக்கட் மீதான பகிரப்பட்ட ஆர்வம் மற்றும் ஈடுபாட்டின் ஊடாக ரசிகர்களுடனான பிணைப்பை வலுப்படுத்துவதற்கான அந்த குழுமத்தின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றது. அத்துடன், சமூகங்களை ஒன்றிணைப்பதற்கும் தேசத்தை ஊக்குவிப்பதற்கும் விளையாட்டும் தொழில்நுட்பமும் எவ்வாறு இணைந்து செயல்பட முடியும் என்பதையும் வெளிப்படுத்துகிறது.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278