Header Logo
SLIC
கிழக்கு
புத்தங்கல சரணாலயப் பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

Jul 14, 2026 - 09:30 AM

புத்தங்கல சரணாலயப் பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!
Mobitel Inner 1278
EDEX Inner

அம்பாறை, புத்தங்கல சரணாலயப் பகுதியில் அமைந்துள்ள அரசாங்கத்துக்குச் சொந்தமான காணி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை வைத்திருந்த நபர் அம்பாறை வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

காட்டு விலங்குகளை வேட்டையாடும் நோக்கில் குறித்த நபர் சட்டவிரோதத் துப்பாக்கியுடன் நடமாடுவதாக வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கை கடந்த ஆம் திகதி 12 மாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட சட்டவிரோதத் துப்பாக்கியை மீட்டெடுத்துள்ள அதிகாரிகள் சந்தேக நபரை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (13) ஆஜர்படுத்த உள்ளதாக வனவிலங்குத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அம்பாறை வனவிலங்குத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரிகளின் வழிகாட்டலின் கீழ் வனவிலங்கு கள பாதுகாவலர் ஜி.என். டி சில்வா, வனவிலங்குப் பாதுகாவலர் ஜெயந்தன், இ. வனவிலங்குப் பாதுகாவலர் கே.எம்.எச்.பி. சஞ்சீவ அதிகாரிகளே இந்தச் சந்தேக நபரைச் சுற்றிவளைத்துக் கைது செய்துள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.

MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278