Jul 14, 2026 - 12:19 PM -
0
இலங்கையில் புகழ் பெற்றுத் திகழும் ஆண்கள் ஆடை வர்த்தக நாமமான சிக்னேச்சர் (Signature), கம்பஹாவில் தனது புதிய காட்சியறையைத் திறந்து வைத்து, சில்லறை விற்பனை வலையமைப்பை மேலும் விரிவுபடுத்தும் முக்கியமான நடவடிக்கையை பதிவு செய்துள்ளது.
கம்பஹா, கொழும்பு வீதி, இலக்கம் 128/1 இல் அமைந்துள்ள இந்த புதிய கிளையானது, சிக்னேச்சரின் 11ஆவது காட்சியறையாக அமைந்துள்ளதுடன், இலங்கை முழுவதும் அதன் சில்லறை விற்பனைப் பரவலை மேலும் வலுப்படுத்தும் முக்கிய மைல்கல்லாகவும் திகழ்கிறது. இந்த பிரம்மாண்ட திறப்பு விழாவில் பிரதம விருந்தினர்களாக ரஞ்சன் ராமநாயக்க மற்றும் வனிந்து ஹசரங்க கலந்து கொண்டதுடன், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பல பிரபல வீரர்களும் கலந்துகொண்டனர்.
இலங்கையில் ஆண்கள் ஆடை நாகரிகத்திற்கு தொடர்ந்து புதிய பரிமாணங்களை வழங்கி வரும் வர்த்தகநாமமாகத் திகழும் சிக்னேச்சர் ஆனது, கம்பஹாவில் திறக்கப்பட்டுள்ள தனது புதிய காட்சியறையின் மூலம் உயர்தர, நவீன ஆடைகளுக்கான அதிகரித்து வரும் வாடிக்கையாளர் தேவையைப் பூர்த்தி செய்கிறது. இந்தக் காட்சியறையில் அலுவலகப் பயன்பாட்டுக்குகந்த ஆடைகள் (Formal), வைபவதிற்குகந்தவை (Ceremonial), நேர்த்தியான ஸ்டைலான ஆடைகள் (Smart Casual), சாதாரணமானவை (Casual), லினன் (Linen) மற்றும் விருந்துகளுக்கு அணியும் ஆடைகள் (Party Wear) உள்ளிட்ட பல்வேறு வகையான ஆடை வகைகள் இடம்பெற்றுள்ளன. மேலும், உயர்தர முழு ஆடைத்தொகுதிகள்[suits], சட்டைகள், பிளேசர்கள் மற்றும் காற் சட்டைகளுடன், தோல் பொருட்கள், பாதணிகள் மற்றும் ஆண்களுக்கான அணிகலன்களின் விரிவான தெரிவும் வழங்கப்படுகிறது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தமது ஒவ்வொரு தோற்றத்தையும் முழுமையாக்க தேவையான அனைத்தையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள முடியும். இதனுடன், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான நவநாகரிக ஆடைவகைகளும் இடம்பெற்றுள்ளதால், முழுக் குடும்பத்தினரின் ஆடைத் தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்யக்கூடிய வசதியான ஷொப்பிங் தள மாகவும் இந்தக் காட்சியறை விளங்குகிறது.
இந்த விரிவாக்கம் தொடர்பாக சிக்னேச்சரின் பணிப்பாளர் அம்ஜத் ஹமீத், தெரிவிக்கையில், இலங்கை முழுவதும் எமது சில்லறை விற்பனை வலையமைப்பை தொடர்ந்து விரிவுபடுத்தி வரும் நிலையில், கம்பஹா மக்களுக்கும் சிக்னேச்சரின் சிறப்பான ஷொப்பிங் அனுபவத்தை வழங்குவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். சிறந்த தரம், நவநாகரிக வடிவமைப்பு மற்றும் பெறுமதிமிக்க விலையில் ஆடைகளை வழங்குவதோடு, வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான கொள்வனவு அனுபவத்தையும் வழங்குவதே எமது நோக்கமாக இருந்து வருகிறது. முக்கியமான பகுதிகளில் புதிய காட்சியறைகளைத் திறப்பதன் மூலம் சிக்னேச்சரை வாடிக்கையாளர்களுக்கு மேலும் நெருக்கமாகக் கொண்டு செல்வதோடு, எமது சில்லறை விற்பனை அனுபவத்தையும் தொடர்ந்து மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளோம், என்றார்.
கம்பஹாவில் அமைந்துள்ள சிக்னேச்சரின் புதிய காட்சியறையானது, வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட கொள்வனவு அனுபவத்தை வழங்கும் வகையில் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விசாலமானதும் சமகால வடிவமைப்பைக் கொண்டதுமான உள்புற அமைப்பு, வாடிக்கையாளர்கள் சௌகரியமான மற்றும் அமைதியான சூழலில் புதிய ஆடைத் தொகுப்புகளை பார்வையிட்டு தமக்குத் தேவையானவற்றைத் தேர்ந்தெடுக்க உதவுகிறது. சிக்னேச்சரின் உயர்தர ஆண்கள் ஆடை வர்த்தகநாமமான ICON-க்கு மேலாக, பெண்களுக்கான நவநாகரிக ஆடைகளை வழங்கும் Her Choice, சிறுவர்களுக்கான Signature Junior, மற்றும் தரமான பாதணிகளை வழங்கும் Campus Shoes ஆகிய வர்த்தகநாமங்களும் இந்தக் காட்சியறையில் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம், குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் தேவையான ஆடை மற்றும் வாழ்க்கைமுறை சார்ந்த பொருட்களை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளும் முழுமையான ஷொப்பிங் அனுபவம் வழங்கப்படுகிறது.
தனது விரிவான சில்லறை விற்பனைச் சேவைக்கு மேலாக, இலங்கை முழுவதும் பரந்து விரிந்துள்ள 300- க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்களைக் கொண்ட வலையமைப்பின் ஊடாக மொத்த விற்பனை வசதியையும் சிக்னேச்சர் வழங்கி வருகிறது. மேலும், நிறுவனத்தின் புதுமையான மொத்த விற்பனை மொபைல் செயலி மூலம், விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தக உரிமையாளர்கள் சிக்னேச்சரின் சமீபத்திய ஆடைத் தொகுதிகளை எளிதாகப் பார்வையிட்டு, தமக்கு தேவையானவற்றை வசதியாக ஓர்டர் செய்யும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
1990 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, தரம், நவநாகரிகம் மற்றும் நியாயமான விலை ஆகியவற்றில் கொண்டுள்ள உறுதியான அர்ப்பணிப்பின் மூலம் சிக்னேச்சர் ஆடைத் துறையில் நம்பிக்கைக்குரிய முன்னணிவர்த்தக நாமமாக தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இன்று, இலங்கை முழுவதும் தொடர்ந்து விரிவடைந்து வரும் காட்சியறை வலையமைப்புடன், மாலைத்தீவிலும் தனது வர்த்தக இருப்பை நிலைநிறுத்தி, உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் தனது தடத்தை மேலும் விரிவுபடுத்தி வருகிறது.
