Header Logo
Mogo Academy

வணிகம்
Vietjet கொழும்புக்கான தனது சேவையை அறிமுகம் செய்வதற்கு முன்னதாக ஆசியாவில் பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனங்களில் ஒன்று எனும் கௌரவிப்பைப் பெற்றுள்ளது

Jul 14, 2026 - 12:22 PM -

0

Vietjet கொழும்புக்கான தனது சேவையை அறிமுகம் செய்வதற்கு முன்னதாக ஆசியாவில் பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனங்களில் ஒன்று எனும் கௌரவிப்பைப் பெற்றுள்ளது
Mobitel inner

கொழும்பு மற்றும் ஹோ சி மினா சிட்டி இடையில் நேரடி விமான சேவைகளை அறிமுகம் செய்ய Vietjet தயார்ப்படுத்தியுள்ள நிலையில், விமான சேவையின் ஊழியருக்கு முக்கியத்துவமளிக்கும் கலாசாரத்திற்காக, முதலாவது சர்வதேச கௌரவிப்பைப் பெற்றுள்ளது. அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த HR Asia விருதுகள் 2026 இல், ஆசியாவில் பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக Vietjet பெயரிடப்பட்டிருந்தது. இந்த தரப்படுத்தலில் தொடர்ச்சியாக ஆறாவது வருடமாகவும், இந்த தரப்படுத்தலைப் பெற்றுள்ளதுடன், தனது முதலாவது HR Asia Diversity, Equity & Inclusion (DE&I) விருதையும் சுவீகரித்திருந்தது. 

வருடாந்தம் HR Asia இனால் ஏற்பாடு செய்யப்படும் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வினூடாக, சிறந்த மனித வளங்கள் செயன்முறை, உயர் ஊழியர் ஈடுபாடு மற்றும் உறுதியான பணியிட கலாசாரம் ஆகியவற்றை கொண்டிருக்கும் நிறுவனங்கள் கௌரவிக்கப்படுகின்றன. 2026 ஆம் ஆண்டு கௌரவிப்பைப் பெற்ற நிறுவனங்கள் வரிசையில், வியட்நாமைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் பல அடங்கியுள்ளதுடன், அதில் Vietjet இன் நிபுணத்துவ, ஈடுபாட்டுனான மற்றும் ஊக்குவிப்பான பணிச்சூழல் போன்றவற்றுக்கான தனது நிலையான முயற்சிகளுக்காக முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

இந்த ஆண்டு, முதன் முறையாக Vietjet இற்கு HR Asia DE&I விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. பரந்த, சமத்துவ மற்றும் உள்ளடக்கமாக பணியிடங்களை வழங்குவதனூடாக சகல பின்புலங்களையும் கொண்ட ஊழியர்களுக்கு மதிப்பளித்தல், வலுவூட்டல் மற்றும் வளர்ச்சிக்கு சமத்துவமான வாய்ப்பளித்தல் போன்றவற்றுக்காக இந்தப் பிரிவில் நிறுவனங்களுக்கு கௌரவிப்பு வழங்கப்படுகின்றன. 

இந்த இரட்டை கௌரவிப்பினூடாக, தனது நீண்ட கால வளர்ச்சி மூலோபாயத்தில் ஊழியர்களை முக்கியத்துவப்படுத்துவதில் Vietjet காண்பிக்கும் அர்ப்பணிப்பு பிரதிபலிக்கப்பட்டுள்ளதுடன், திறந்த, நிபுணத்துவமான மற்றும் சர்வதேச ரீதியில் இணைக்கப்பட்ட பணியிடத்தை ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்தப்படுகிறது. அதேவேளை, 2026 ஆகஸ்ட் 18 அன்று திட்டமிடப்பட்டுள்ள கொழும்பு – ஹோ சி மினா சிட்டி இடையிலான ஆரம்பக்கட்ட விமானச் சேவையுடன், இலங்கைச் சந்தைக்குள் இந்த விமான நிறுவனத்தின் பிரவேசத்தை உறுதிப்படுத்துகின்ற ஒரு பொருத்தமான தருணமாகவும் இது அமைகின்றது. 

Vietjet தற்போது 68 இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 10,000 ஊழியர்களையும் நிபுணர்களையும் பணியில் அமர்த்தியுள்ளது. இவர்களில் கிட்டத்தட்ட 30 சதவீதமானோர் 20 முதல் 30 வயதிற்கு இடைப்பட்ட இளம் தொழில் வல்லுநர்களாவர். இவர்கள் இந்த விமான நிறுவனத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்குத் தங்களின் புதுமைப்படைப்பு, படைப்பாற்றல் மற்றும் புதிய முன்னோக்குகளைப் பங்களிப்பாக வழங்குகின்றனர். 

நீண்டகாலத் திறமை மேம்பாட்டிற்கு ஆதரவளிக்கும் வகையில் Vietjet, விக்டோரியா ஏவியேஷன் அகடமி (VIAA) ஊடாகப் பயிற்சிகளிலும் தொழில்முறை மேம்பாடுகளிலும் பெருமளவில் முதலீடு செய்துள்ளது. இங்கு ஊழியர்கள் சர்வதேச தரத்திலான விமானப் போக்குவரத்துப் பயிற்சிகள், தலைமைத்துவத் திட்டங்கள் மற்றும் தொழில்துறை நிபுணர்களால் நடத்தப்படும் விசேட படிப்புகள் ஆகியவற்றில் பங்கேற்கின்றனர். 

ஊழியர்களின் நல்வாழ்வு என்பது Vietjet இன் மற்றுமொரு முக்கிய முன்னுரிமையாகும். உணவருந்தும் பகுதிகள், சினிமா அரங்கு, உடற்பயிற்சிக் கூடம், யோகா அறை மற்றும் சமூகக் கூடங்கள் போன்ற நவீன பணியிட வசதிகளுக்கு மேலதிகமாக, ஊழியர்களின் ஈடுபாட்டையும் பணியிடக் கலாச்சாரத்தையும் வலுப்படுத்தும் கலாச்சார, விளையாட்டு மற்றும் குழுநிலைக் கட்டியெழுப்பும் செயல்பாடுகளை இந்த விமான சேவைகளை வழங்கும் நிறுவனம் வழக்கமாக ஏற்பாடு செய்கிறது. 

துடிப்புமிக்க, படைப்பாற்றல் கொண்ட மற்றும் சர்வதேச அளவில் பன்முகத்தன்மை வாய்ந்த ஒரு பணியாளர்தொகையைக் கொண்டுள்ள Vietjet, நவீன, உலகளாவிய ரீதியில் இணைக்கப்பட்ட மற்றும் மக்கள் மையப்படுத்தப்பட்ட ஒரு விமான நிறுவனமாக மாறுவதற்கான தனது தொலைநோக்குப் பார்வையைத் தொடர்வதன் மூலம், தனது நீண்டகாலப் போட்டித்திறனைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றது. இலங்கையிலிருந்து பயணிப்போருக்கு, இந்த விமான நிறுவனம் வியட்நாமின் மிகப்பெரிய நகரத்திற்கான இணைப்புகளை வழங்குவதுடன் மட்டுமல்லாமல், வியட்நாமின் முக்கிய மையங்களின் ஊடாக ஆசியா, அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா ஆகிய பிராந்தியங்களிலுள்ள முதன்மையான இடங்களுக்கான விமான இணைப்புகளையும் வழங்குகின்றது.


MOST READ

காணொளி
பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

Mobitel Upahara