Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
சீரியல் நடிகையை நிர்வாணமாக போட்டோ எடுக்க முயற்சித்த தயாரிப்பாளர்!

Jul 14, 2026 - 12:29 PM

சீரியல் நடிகையை நிர்வாணமாக போட்டோ எடுக்க முயற்சித்த தயாரிப்பாளர்!
Mobitel Inner 1278

பிரபல சீரியல் நடிகைக்கு நடந்த கொடுமைதான் சோசியல் மீடியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. புதியதாக ஒரு சாமி படத்தில் நடிக்க கதாநாயகி வேண்டும் என்று வந்த விளம்பரத்தை நம்பி போன நடிகைக்கு இறுதியில் பெரிய அதிர்ச்சி கிடைத்திருக்கிறது. அதாவது அந்த நடிகையை ஆடையின்றி போட்டோ எடுக்க முயற்சி செய்திருக்கின்றனர். 

கடந்த வருடம் ஒரு சின்னத்திரை நடிகையின் வீடியோ வெளியாகி அனைவருமே அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. இது ஒரிஜினல் வீடியோவா? அல்லது ஐ வீடியோவா? என்ற குழப்பம் இருந்தது. எதிர்தரப்பில் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த ஒரு தயாரிப்பாளர் என்னவெல்லாம் செய்ய சொல்கிறாரோ அதையெல்லாம் அந்த நடிகையும் செய்து செய்வது போல காட்சிகள் இருந்தது. 

பிரபலமான சீரியலில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்த நடிகை ஆடையின்றி அந்த வீடியோவில் இருந்தார். அது மட்டும் இல்லாமல் அந்த தயாரிப்பாளர் செய்ய சொன்ன ஆபாசமான செயல்களை எல்லாம் மறுக்காமல் செய்து கொண்டு இருந்தது ரசிகர்களை பதற வைத்திருந்தது. சினிமா துறையில் வாய்ப்புக்காக இப்படியெல்லாம் செய்வார்களா? என்று கூட பலரும் அதிர்ச்சி அடைந்தனர். 

இந்த நிலையில் இப்போது அதேபோல இன்னொரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அதாவது சென்னை பெருங்குடி பகுதியை சார்ந்த நந்தி ராமநாதன் என்பவர் தான் ஒரு சினிமா தயாரிப்பாளர் என்று பலரிடம் அறிமுகம் செய்திருக்கிறார். அதோடு தான் புதியதாக தொடங்க இருக்கும் சாமி படத்தில் அம்மன் வேடத்தில் நடிப்பதற்காக புதுமுக ஆள் தேவைப்படுவதாக விளம்பரம் செய்திருக்கிறார். இதனை நம்பிய ஒரு சீரியல் நடிகை அந்த சாமி படத்தில் நடிப்பதற்காக அந்த நபருக்கு போன் செய்து பேசியிருக்கிறார். 

அப்போது அந்த நபர் விருகம்பாக்கத்தில் உள்ள பிரபல ஹோட்டலுக்கு நடிகையை ஆடிசனுக்கு வர சொல்லி இருக்கிறார். தயாரிப்பாளரின் பேச்சை நம்பி சீரியல் நடிகையும் அந்த விருகம்பாக்கம் ஹோட்டலுக்கு போய் இருக்கிறார். அங்கு நந்தி ராமனுடன் இந்திராணி மற்றும் பார்திகா என்ற இரண்டு பெண்கள் இருந்திருக்கின்றனர். 

அவர்கள் தயாரிப்பாளரின் அசிஸ்டன்ட் என்று சொல்லிக்கொண்டு அந்த நடிகையை விதவிதமாக தங்களுடைய தொலைபேசியில் புகைப்படங்களை எடுத்திருக்கிறார்கள். பிறகு அந்த நடிகையிடம் இந்த அம்மன் படத்தில் நடிப்பதற்கு உடம்பில் தழும்பு எதுவும் இருக்கக்கூடாது. நீங்கள் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றால் உங்கள் உடம்பில் தழும்பு இருக்கிறதா? இல்லையா? என்று நாங்கள் செக் பண்ண வேண்டும் அதனால் நீங்கள் டிரெஸ்ஸ கழட்டுங்க என்று சொல்லி இருக்கின்றனர். 

அதோடு நாங்கள் டிரஸ் கழட்டி எடுக்கும் புகைப்படங்கள் இந்த படத்தின் ஆடிஷனுக்கு தேவைப்படும் என்றும் சொல்லி இருக்கிறார்கள். சீரியல் நடிகைக்கு நடந்த கொடுமை இதனால் அந்த நடிகை பயந்து போய் முடியாது என்று சொல்லி இருக்கிறார். 

ஆனால் அந்த இரண்டு பெண்களும், நந்தி ராமநாதனும் சேர்ந்து சினிமா வாய்ப்பு சும்மா வருமா? இப்படி எல்லாம் புகைப்படம் எடுத்தா தான் வரும் என்று அவரை கட்டாயப்படுத்தி இருக்கின்றனர். ஆனால் அந்த நடிகை முடியாது என்று சொல்லி வெளியே தப்ப முயன்றிருக்கிறார். அவர்கள் மூன்று பேரும் அந்த நடிகையை ரூமுக்குள் வைத்து அடைக்க முயற்சி செய்திருக்கிறார்கள். 

பிறகு அவர் அங்கிருந்து கத்தி ஆர்ப்பாட்டம் செய்து வெளியே ஓடிவந்து சம்பவம் குறித்து சென்னை பொலிஸ் சிங்கப்பெண் படைக்கு தகவல் கொடுத்து இருக்கிறார். தகவல் கிடைத்த கொஞ்ச நேரத்திலேயே சிங்கப்பெண் சிறப்பு படை பொலிஸார் அந்த ஹோட்டலில் பதுங்கி இருந்த போலி தயாரிப்பாளர் நந்தி ராமநாதன், தரமணி பகுதியை சேர்ந்த இந்திராணி மற்றும் விருதுநகரை சேர்ந்த கேமரா பெண் பார்திகா ஆகிய மூன்று பேரையும் பிடித்து விருகம்பாக்கம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றனர். 

எந்தத் துறையில் பார்த்தாலும் இதுபோல சில ஏமாற்றுக்காரர்களால் பெண்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் இருந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் சினிமா துறையில் அதற்கு ஒரு படிக்கு மேலே தான் இருக்கிறது. இதுபோன்ற ஏமாற்று பேர்வழிகளை நம்பி பல பெண்கள் தங்களுடைய வாழ்க்கைகளை சீரழிக்கிறார்கள். ஒரு சிலர் தைரியமாக வெளியே வந்து புகார் கொடுக்கிறார்கள். 

அதிலும் இந்த சம்பவத்தில் இன்னொரு அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் சம்பந்தப்பட்ட நந்தி ராமநாதன் தயாரிப்பாளரே கிடையாதாம். அவர் எந்த பாடத்தையும் இதுவரைக்கும் தயாரிப்பு செய்யவே இல்லையாம். இதுபோல போலியான அட்வர்டைஸ்மென்ட் கொடுத்து பெண்களை மிரட்டி அவர்களுக்கு பணம் கொடுக்காமல் ஆடிஷன் என்ற பெயரில் போட்டோஸ் வீடியோக்கள் எடுத்து இருக்கிறார்கள். 

இது பொலிஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இவர்களை பொலிஸார் விசாரித்து வரும் நிலையில் இன்னும் அதிர்ச்சிகரமான செய்திகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

Mobitel 1278