Header Logo
Mogo Academy

செய்திகள்
நீர்கொழும்பு சிறை மோதல் தீவிரமடைந்தமைக்கான காரணம்

Jul 14, 2026 - 02:59 PM -

0

  நீர்கொழும்பு சிறை மோதல் தீவிரமடைந்தமைக்கான காரணம்
Mobitel inner

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் இவ்வளவு தூரம் தீவிரமடைந்ததற்குக் காரணம், கைதிகள் மீது வைக்கப்பட்டிருந்த அதீத நம்பிக்கையே என முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். 

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில், 'அத தெரண BIG FOCUS' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க இதனைக் குறிப்பிட்டார். 

"ஞாயிற்றுக்கிழமையன்று உள்ளக பிரச்சினை காரணமாக இரண்டு கைதிகள் உயிரிழக்கின்றனர். அது அதிகாரிகளுக்குப் பரவியிருக்கவில்லை. மறுநாள் காலையில் எமது அதிகாரிகள் குழுவினர் ஆயுதங்கள் ஏதுமின்றி அந்த சிறைச்சாலைக்குள் செல்கின்றனர்." 

"இங்கு காணப்பட்ட மிகப்பெரிய மற்றும் முதன்மையான பிரச்சினை என்னவென்றால், ஒரு கைதி குறித்து வைக்கப்பட்டிருந்த அதீத நம்பிக்கையாகும்." 

"எனது சிறைச்சாலைத்துறை வாழ்க்கை சுமார் 38 வருடங்களாகும். நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒரு கைதியைக் கூட நம்பியதில்லை." 

"அதன் காரணமாக நான் நினைக்கிறேன்.. எமது அதிகாரிகள் செய்த பாரதூரமான தவறு, கைதிகளை நம்பி சிறைச்சாலைக்குள் சென்றதே ஆகும்." 

"43,000 கைதிகள் உள்ள இடத்தில், 5,500 போன்ற சிறிய அளவிலான அதிகாரிகள் குழுவினரே இந்த முழுச் சுமையையும் சுமக்க வேண்டியுள்ளது." என்றார்.


MOST READ

காணொளி
பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

Mobitel Upahara