Header Logo
Mogo Academy

செய்திகள்
இலங்கையில் சுற்றுலாப் பயணிகள் செலவிடும் டொலர் தொகை குறைவடைந்துள்ளது

Jul 14, 2026 - 03:31 PM -

0

இலங்கையில் சுற்றுலாப் பயணிகள் செலவிடும் டொலர் தொகை குறைவடைந்துள்ளது
Mobitel inner

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் செலவிடும் டொலர் தொகையை 2030ஆம் ஆண்டாகும்போது கணிசமான அளவில் அதிகரிப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

 

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணி ஒருவரின் சராசரி செலவு 148 டொலர்களாகக் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

களுத்துறை மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை வலுப்படுத்துவது தொடர்பாக களுத்துறை மாவட்ட செயலகத்தில் இன்று (14) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

 

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்:

 

"நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு ஆய்வை மேற்கொண்டோம். குறிப்பாக கொவிட் பெருந்தொற்றுக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகளின் நடத்தை மற்றும் அவர்களின் செலவினங்கள் குறித்து ஆராய்ந்தோம்."

 

"சராசரியாகப் பார்த்தால், இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணி ஒருவர் 148 டொலர்களையே செலவிடுகிறார். இது 2018 - 2019 காலப்பகுதியில் 171 டொலர்களாகக் காணப்பட்டது."

 

"2030ஆம் ஆண்டாகும்போது இந்தச் சராசரி செலவை, அதாவது சுற்றுலாப் பயணி ஒருவர் மேற்கொள்ளும் செலவை அதிகரிப்பதே எமது இலக்காகும். அதன் மூலமே பொருளாதாரப் பங்களிப்பை நம்மால் அதிகரித்துக்கொள்ள முடியும்."

 

"அவ்வாறு அதிகரிப்பதற்கு, எமது சுற்றுலாத்துறை சார்ந்த அனுபவங்களை நாம் மேம்படுத்த வேண்டும். இது தானாக நடக்கும் ஒன்றல்ல, திட்டமிட்டபடி செய்ய வேண்டிய ஒரு காரியமாகும்."


MOST READ

காணொளி
பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

Mobitel Upahara