Header Logo
Mogo Academy

செய்திகள்
11 முக்கிய பிரமுகர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதா?

Jul 14, 2026 - 04:40 PM -

0

11 முக்கிய பிரமுகர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதா?
Mobitel inner

11 முக்கிய பிரமுகர்களுக்கு விசேட பிரமுகர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று (14) விளக்கமளித்துள்ளார்.

 

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

 

பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட சிலருக்கு விசேட பிரமுகர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகியிருந்தன. 

 

அந்தப் பட்டியலில் அசோக ரன்வல, முகமது ரிஸ்வி சாலி, சரத் குமாரா, அஜித் சாந்த, ருவன் விஜேவீர, திலங்க யு. கமகே, சுனில் பியன்வில, தினேஷ் ஹேமந்த, ரஞ்சித் மத்துமபண்டார, எச்.ஏ. தர்மசேன மற்றும் கலகொடஅத்தே ஞானசார தேரர் உட்பட 11 பேர் உள்ளடங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இருப்பினும், இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், விசேட பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரினால் இந்த பிரமுகர் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

 

அதற்கமைய, குறிப்பிடப்பட்ட நபர்கள் எவருக்கும் எவ்வித விசேட பிரமுகர் பாதுகாப்பும் வழங்கப்படவில்லை என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.


MOST READ

காணொளி
பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

Mobitel Upahara