Header Logo
Mogo Academy

செய்திகள்
கட்டாரின் முன்னாள் அமீர் மறைவுக்கு திலித் ஜயவீர இரங்கல்

Jul 14, 2026 - 05:37 PM -

0

கட்டாரின் முன்னாள் அமீர் மறைவுக்கு திலித் ஜயவீர இரங்கல்
Mobitel inner

மறைந்த கட்டார் நாட்டின் முன்னாள் அமீர் ஷேக் ஹமாத் பின் கலீஃபா அல் தானி அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக, சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர இன்று (14) கொழும்பில் உள்ள கட்டார் தூதரகத்திற்குச் சென்றிருந்தார்.

 

அங்கு கட்டார் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள விசேட இரங்கல் புத்தகத்தில் நினைவுக் குறிப்பொன்றை எழுதிய அவர், இலங்கை மக்கள் மற்றும் சர்வஜன அதிகாரம் சார்பாக தனது ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொண்டார்.

 

இந்த சந்தர்ப்பத்தில், இலங்கை மற்றும் கட்டார் நாட்டிற்கு இடையே நிலவும் நீண்டகால இருதரப்பு உறவுகள், ராஜதந்திர ஒத்துழைப்பு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான நட்பு குறித்தும் விசேடமாக நினைவு கூரப்பட்டது.

 

இந்நிகழ்வில் சர்வஜன அதிகாரத்தின் ஊடக செயலாளரும், சர்வஜன அதிகாரம் முஸ்லிம் கூட்டணியின் தேசிய அமைப்பாளருமான ஹசன் அலால்தீன் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.


MOST READ

காணொளி
பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

Mobitel Upahara