Header Logo
Mogo Academy

செய்திகள்
சிறை மோதலில் துப்பாக்கியால் சுட்ட அதிகாரிக்கு தற்காலிக இடமாற்றம்

Jul 14, 2026 - 08:05 PM -

0

சிறை மோதலில் துப்பாக்கியால் சுட்ட அதிகாரிக்கு தற்காலிக இடமாற்றம்
Mobitel inner

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட பயங்கர மோதலைக் கட்டுப்படுத்துவதற்காக துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரி, பல்லேகல சிறைச்சாலைக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

 

கடந்த ஜூலை 6ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தின் போது, கைதிகள் சிறைச்சாலையின் இறுதி மரக் கதவையும் உடைத்துக்கொண்டு வெளியே வர முயன்ற சந்தர்ப்பத்தில், சிறைச்சாலை அதிகாரி ஒருவரால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.

 

இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில், சிறைச்சாலைக்குள் இருந்த கைதிகள் குழுவொன்று சிறைச்சாலை அதிகாரிகள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளமை தெரியவந்ததுடன், அந்தச் சந்தர்ப்பத்தில் நிலைமையைக் கட்டுப்படுத்தவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளவுமே இந்த அதிகாரி துப்பாக்கியைப் பயன்படுத்தியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

 

இந்தத் துப்பாக்கிச் சூடானது சிறைச்சாலை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே நடத்தப்பட்டதா அல்லது அதிகார வரம்பை மீறிச் செயல்படப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக தற்போது ஒரு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

இந்த கொடூரமான மோதல் காரணமாக, இதுவரை 10 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 31 பேர் உயிரிழந்துள்ளனர்.


MOST READ

காணொளி
பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

Mobitel Upahara