Header Logo
Mogo Academy

செய்திகள்
20% கட்டணம் விதிக்கும் திட்டத்தைக் கைவிட்டார் டிரம்ப்!

Jul 14, 2026 - 09:24 PM -

0

20% கட்டணம் விதிக்கும் திட்டத்தைக் கைவிட்டார் டிரம்ப்!
Mobitel inner

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு விதிக்கப்படவிருந்த 20 சதவீதக் கட்டணத் திட்டத்தை அமெரிக்கா கைவிடுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

 

அதற்குப் பதிலாக, வளைகுடா நட்பு நாடுகளுடன் மேற்கொள்ளப்படும் புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் இந்த விவகாரத்திற்குத் தீர்வு காணப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

முக்கிய உலகளாவிய எரிசக்திப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கான அமெரிக்காவின் செலவினங்களை ஈடுசெய்ய, 20% கட்டணம் விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்திருந்தார். 

 

சர்வதேச அளவில் இந்த அறிவிப்பு பெரும் விவாதங்களைக் கிளப்பிய நிலையில், ஒரே நாளில் அவர் தனது முடிவை மாற்றியுள்ளார்.

 

இது குறித்து தனது 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளதாவது:

 

"மத்திய கிழக்கு நாட்டுத் தலைவர்களுடன் நடத்தப்பட்ட மிகச் சிறந்த பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், 20% அமெரிக்க ஈடுசெய்யும் கட்டணத் திட்டத்தைக் கைவிட முடிவு செய்துள்ளேன். அதற்குப் பதிலாக, பல்வேறு வளைகுடா நாடுகள் அமெரிக்காவில் மேற்கொள்ளவுள்ள பிரம்மாண்ட வர்த்தக மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்கள் நடைமுறைப்படுத்தப்படும். இந்த முதலீடுகள் மிகவும் பிரம்மாண்டமானதாகவும், அவர்களது எதிர்காலத்திற்குப் பயனுள்ளதாகவும் அமையும்."


MOST READ

காணொளி
பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

Mobitel Upahara